அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

எரிந்துபோன குடியிருப்புகளும் கருகிப்போன நம்பிக்கைகளும்

""எட்டடி காம்பிராவுக்குள் இத்தனைப் பேர் இருக்கிறதே கஷ்டம். ஆனா அதுவும் இல்லாது போன பின் எல்லோரும் இந்த குசினியில தான்! சமையல், சாப்பாடு, தூங்குறது எல்லாமே இதுக்குள்ளதான் எனத் தங்களது சிறிய குசினியை எமக்கு காட்டுகிறார் தலவாக்கலை பெயார்வெல் தோட்டத்திலுள்ள பெல்கிரேவியா தோட்டப் பிரிவைச் சேர்ந்த செல்லம்மா என்பவர்.

கடந்த வருடம் இத்தோட்டத்திலுள்ள பன்னிரெண்டு வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்புத் தொகுதியொன்று திடீரென ஏற்பட்ட மின்னொழுக்கினால் எரிந்து சாம்பரானதுடன் இக் குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் தமது பெறுமதியான சொத்துகள் பலவற்றையும் இழந்தனர்.

இதன் பின்னர் சில மாதங்களாக தற்காலிக குடில்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி யிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப் புகளாலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அவை இன்று வரை நிறை வேற்றப்படவில்லை என்பதோடு தாம் வேறொரு குடியிருப்புக்களுக்கு மாற்றப்பட வில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தடைப்பட்டுப் போன திருமணங்கள் கல்யாணம் காட்சி செய்யறதுக்கு அங்க இங்கனு கடன் வாங்கி இருந்த வீட்டை கொஞ்சம் திருத்தி ஏதோ எங்களால முடிஞ்சளவு இந்த எட்டடி காம்பிராவ அழகுபடுத்தி வச்சோம். ஆனா ஒரு மாதம்கூட ஆகல.
ஒரே நாள்ல நெருப்புல எல்லாமே கண்ணு முன்னுக்கே கருகி போச்சி.

அதனால எங்க புள்ளைங்களுக்கு நடக்க விருந்த கல்யாணங்களும் நின்று போச்சி.
அன்னைக்கு வந்து பாத்திட்டு பலரும் பலதையும் சொன்னாங்க. எங்களுக்கும் ஆறுதலாகவும் இருந்திச்சி. ஆனா அதுக்கு பெறகு அவங்கல்லாம் யாருமே இந்தப் பக்கம் வரவும் இல்ல. அவங்க சொன்னது எதுவுமே நடக்கவும் இல்ல. மழையிலும், பனியிலும் வாடிக்கிட்டு எங்க வீட்ல உள்ள எல்லோரும் இந்த குசினியிலதான் நாள ஓட்டிகொண்டு இருக்கின்றோம். அப்படியிருக்கப்ப இதுக்கு ள்ள நாங்க படுக்கிறது எப்படி? எங்க புள்ளங்க படிக்கிறது எப்படி?'' என ஆதங்கத் தோடு குறிப்பிடுகிறார் இத்தோட்டத்தில் உள்ள பெண்மணி (செல்லம்மா) ஒருவர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தீ விபத்துக்குள்ளான இந்த லயன் அறையில் வசித்த தொழிலாளர் குடும்பங்களுக்கு வெகு விரைவில் மாற்று இடங்களில் புதிய வீடுகள் கட்டித் தரப்படுமென உறுதி மொழிகள் வழங்கப்பட்டதாகவும் அது ஜனவரி 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு கையளிக்கப்படும் என கூறப்பட்ட போதும் இன்றுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவுமே ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இத்தோட்ட மக்கள் விசனம் தெவிக்கின்றனர்.

தவறான செய்தி
படுக்கிற பாயிலிருந்து உடுத்துற உடுப்பு முதல் எல்லாமே ஒரே நாள்ல இல்லாம போச்சி. இதையெலாம் பழையபடி உடனடியா தேடிக்கிறதுங்கிறது குதிரை கொம்புதான். ஆனா ஒரு வீட்டை கட்டிக்கிறது. எங்க சம்பளத்த பொறுத்தவரைக்கும் லேசான வேலையே இல்ல. நாங்க தீயில பாதிக் கப்பட்டு திகைச்சி நின்னப்ப உண்மையிலே அந்த நேரத்துல எங்களுக்கு ஆதரவு தந்தவங்க யாரையுமே நாங்க மறக்கல, அவங்களுக்கெல்லாம் வார்த்தையால நன்றி சொல்ல முடியாது.

அதே நேரம் அந்த நேரத்தில எங்களுக்கு பல வாக்குறுதிகள் மட்டும் குடுத்திட்டு அதுக்கு பிறகு எங்கள வந்து எட்டியும் பார்க்காத எங்களோட தலைமைகளை நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கு. எங்களுக்கெல்லாம் மாற்று இடங்களில் உடனடி யாக வீடு கட்டித் தாரேன்னு சொன்னாங்க.
அதுவரைக்கும் கொஞ்சம் பொறுக்கச் சொன்னாங்க. ஆனா இதுவரைக்கும் எதுவுமே நடக்கல, ஆனா நாங்க எல்லோரும் வேறு இடத்தில குடியமர்த்தப்பட்டு இருக்கிறதா பேப்பர்ல செய்தியும் வந்திருச்சி. ஆனா உண்மைய நீங்களே வந்து பாருங்க என ஒருவர் (ரவி) எம்மை அழைத்துச் சென்று காட்டினார்.

எரிந்து போன லயன் அறைகளில் சுவர்க ளில் ஆங்காங்கே வெடிப்புக்கள் காணப் பட்டன. தற்போது தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டிருந்த தகரம் மரங்களைக் கொண்டு கூரைகள் புதுப்பிக்கப்பட்டிருந்தன. தீ பற்றிய போது அணைக்க ஊற்றிய நீரின் ஈரம் இன்று வரை வீடுகளுக்குள் இருப்பது தெந்தது. ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் எரிந்து விழுந்து கருகிக் கிடக்கும் கூரை மரங்களும் அரை குறையாய் எரிந்து எஞ்சியிருக்கும் ஒரு சில பொருட்களுமே காணப்பட்டன.

தற்போதைய நிலையில் எரிந்து வெடித்த நிலையிலேயே காணப்படும் சுவர்களுக்கு மேலாகவே புதிய சீமெந்து கற்களும் அடுக்கப்பட்டு கூரைகள் போடப்பட்டுள்ளன.

எனவே இப்பகுதியில் அடிக்கும் காற்றுக்கும் மழைக்கும் இது எவ்வளவு காலத்திற்கு தாக்குப் பிடித்து நிற்கும் என்பது சந்தேகமாகவே இருக்கின்றது என இத்தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ""எங்களுக்கு மாற்று இருப்பிடங்கள் கடந்த ஜனவரி மாதத்தில் அமைத்துத் தரு வதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எதுவுமே நடக்கவில்லை. இதற்கு பின்னரும் அவையெல்லாம் நடக்குமென்று நாங்கள் நம்பவில்லை. எனவே நாங்கள் வீடுகளை அமைத்துக் கொள்ள இடம் கடன் உதவிகளையுமாவது பெற்றுக் கொடுப்பார் களானால் எமக்கு பெரிய உதவியாக இருக்கும்'' என தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தெவித்தனர்.

இது தொடர்பாக உய தரப்புகளுக்கு தெயப்படுத்தப்பட்டுள்ளதா? என்று அவர்களிடம் கேட்ட போது இது தொடர்பாக நாங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் உட்பட பல்வேறு அமைப்புக ளுக்கும் அறிவித்து விட்டோம். ஆனால் எந்தப் பலனும் இல்லை'' என்றார்கள்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மேற்படி பெல்கிரேவியா தோட்டப்பிரிவு மக்கள் தங்களுக்கு மாற்று வீடுகள் அமைத்துத் தர வேண்டும் எனவும் தீ விபத்தில் பாதிக்கப் பட்டு இழக்கப்பட்ட சொத்துகளையும் உடைமைகளையும் மீளமைத்துக் கொள்வதற்கு வட்டியில்லா அல்லது குறைந்த வட்டி யிலான இலகு கடன் வசதிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலையக தோட்டப் பகுதிகளில் மின் இணைப்புகள் வழங்கப்பட்ட காலம் தொட்டே தொடர்ச்சியாக பல்வேறு தோட்டங்களிலும் இவ்வாறான தீ விபத்துகள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன. இதன் பின்னரும் இவ்வாறான விபத்துகள் தோட்டப் பகுதிகளில் ஏற்படாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதங்களும் இல்லை.

அதேபோல் இன்றுவரை இவ்வாறான தீ விபத்துகளில் எத்தனையோ தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ழுமையான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லையென தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை மக்கள் ன்வைத்த வண்ணமேயுள்ளனர்.

எனவே பெல்கிரேவியா தோட்டம் மட்டு மல்ல இவ்வாறு தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தமது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ள ஏனைய தோட்ட மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கையினை மீளமைத்துக் கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண் டுமென்பதோடு இவ்வாறான விபத்துகள் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர் கள் துரிதமாக எடுக்க வேண்டும் என்பதே சகலரது எதிர்பார்ப்பும் கோக்கைகளுமாகும்.

குறிஞ்சி குணா

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக