அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 24 ஏப்ரல், 2010

மைக்ரோ ஸொப்ட் போன் டேட்டா மேனேஜர்

கையடக்கத் தொலைபேசியிலுள்ள படங்கள், பாடல்கள், வீடியோ மற்றும் தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றை கணினிக்கு மாற்றவும் அதே போன்று கணினியிலிருந்து இது போன்ற பைல்களை கையடக்கத் தொலைபேசிக்கு மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு மென்பொருளை போன் டேட்டா மேனேஜர் எனும் பெயரில் மைக்ரோ ஸொப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மைக்ரோஸொப்ட் டேட்டா மேனேஜர் கையடக்கத் தொலைபேசிகளுடன் வெளிவரும் PC SUIT மென்பொருளுக்கு நிகரானதே. எனினும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் தயாரிப்புக்கு மட்டு மன்றி நோக்கியா, சோனி எரிக்ஸன், மோட்டரோலா போன்ற பல நிறுவனங்களின் கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒத்திசைவது இதன் சிறப்பம்சமாகும்.

அது மட்டுமன்றி மைக்ரோஸொப்ட் விண்டோஸ் லைவ் (Windows Live) சேவையிலுள்ள தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை கையடக்கத் தொலைபேசியுடன் சமப்படுத்தி விடக் கூடிய வசதியையும் இது தருகிறது. இந்த போன் டேட்டா மேனேஜர் மென்பொருளை மைக்ரோ ஸொப்ட் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். பைல் அளவு 3.3 எம்.பி.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக