சிலர் அதற்கென்று ஒரு கால்வாயை வெட்டினர். வேறு சிலர் அத்திமிங்கலம் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க அதன் மீது போர்வைகளைக் கொண்டு மூடினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
ஆனால் எல்லா முயற்சிகளும் வீணாயின. அந்தப் பெரிய உயிரினம் கடலுக்குள் திரும்பிச் செல்ல முடியாமல் இறந்தது. பின்னர் அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதனை செய்ததில் அது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அது 50 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் பைகளையும் கையுறைகளையும் விழுங்கியிருந்தது. அவை அதன் உள்பகுதிச் செயற்பாடுகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதன் விளைவாக அலைகளை எதிர்த்துச் செல்ல முடியாமல் பலவீனமாகிப் போன திமிங்கலத்தை அலைகள் கடலோரம் ஒதுக்கித் தள்ளிவிட்டன.
நாம் வீசி எறியும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி கடல் உயிரினங்களையும் பாதிக்கின்றன. மும்பையில் உடல் நலம் குன்றிய ஒரு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்த போது, அதன் குடலில் இருந்து பெருமளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு விரைவாக அந்தப் பசு குணமடைந்தது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக