இனி, மிளகாயை உணவின் அழகுக்கும், காரத்திற்கும் மட்டும் பயன்படுத்துகிறோம் என்று எண்ணி வந்ததை மாற்றிக் கொள்வோம், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் அவை பயன்படுகின்றன என்பதை நினைவில் கொள்வோம்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளர் மருத்துவர் கிரண் அஹூஜா தலைமையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வுக் குழு, நீரிழிவை கட்டுப்படுத்தும் ஆற்றலும், கார்டியோ வேஸ்குலர் எனப்படும் இதய நோயில் இருந்து காப்பாற்றும் ஆற்றலும் மிளகாய்க்கு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இவர்களது ஆய்வில் முக்கியமான இரண்டு விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது, மிளகாயில் இருக்கும் சத்துகள், ரத்தத்தில் குளுக்கோஸ் இருப்பதையும், இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், ரத்த நாளங்களின் சுவர்களில் கொழுப்பு திசுக்கள் உருவாவதையும், குழாய்களுக்குள் ரத்த உறைதலையும் கட்டுப்படுத்துகிறது.
எனவே, ஒருவர் தனது உணவில் எடுத்துக் கொள்ளும் மிளகாயில் இருக்கும் சத்துகள், அடுத்த உணவில் வரும் அதிகப்படியான குளுக்கோஸையும், இன்சுலின் சுரப்பிலும் அதிக கவனம் செலுத்துகிறது. குளுக்கோஸ் அளவையும், இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோய் நெருங்கவே முடியாது என்கிறது இந்த ஆய்வுக் குழு.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக