அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

குழந்தைகளின் மனச்சோர்வை எப்படி இனங் காணலாம்?

குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை, அன்பற்ற சூழல், கண்டிப்பான பெற்றோர், நண்பர்கள் இல்லாமை, நண்பர்கள் அல்லது சக மாணவ மாணவியருடன் ஏற்படும் பூசல்கள், சகோதர சகோதரிகள் மத்தி யில் உண்டாகும். போட்டி, பொறாமை, பெற்றோர் செய்யும் ஒப்பீடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாரபட்சம், பாட ச்சுமைகள் என எத்தனை எத்தனையோ.

பின்வரும் அறிகுறிகள் கவனிக்கப்பட வேண்டியவை

* அளவுக்கதிகமான ஒட்டுதல்: சில குழந்தைகள் வளர்ந்த பின்னும் தாய் தந்தையை ஒட்டிக் கொள்ளுவார்கள். தனியாக எங்கும் செல்லப் பயப் படுவார்கள். நெருங்கிய உறவினர்களின் மரணம், புதிய பள்ளிகளில் சேர்க்கப்படுதல், வீட்டில் இன்னொரு குழந்தையின் வரவு தனது சலுகைகளைப் பறித்து விடுமோ என்ற அச்சம் இவையெல்லாம், சில குழந்தைகளிடம் மன அழுத்தத்தைத் தூண்டலாம். உங்களையே குழந்தை சுற்றிச் சுற்றி வருதல், பிரிவு குறித்த அச்சம் இவையெல்லாம் இருக்குமானால், அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

* தனிமையை நாடுதல்: பிறருடன் சேர்ந்து விளையாடிக் களிக்க வேண்டிய குழந்தைகள் சலிப்புற்றுத் தனிமையில் அமருதல், எதிலும் ஆர்வமின்றி இருத்தல் ஆகியவை இருக்குமானால், பெற்றோர் அவர்களிடம் மனம் விட்டு பேசுவது அவசியம். அவர்கள் பேச மறுத்தால், குழந்தைகளுக்கான மனநல மருத்துவ வரை அணுகுவதும் நல்லதே!

* கெட்ட பழக்கங்கள் உருவாதல்: பொய் சொல்லுதல், திருடுதல், பிறரை அடித்தல், எளிதில் கோபப்பட்டு கைக்குக் கிடைப்பதை வீசி எறிதல் போன்ற பழக்கங்கள் புதிதாக உருவாகின்றனவா? இதுவும் மன அழுத்தத்தின் விளைவாகவே இருக்கலாம்.

* தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளுதல்: தான் மக்கு, கெட்ட குழந்தை, அசடு, தனக்குப் படிப்பு வராது என்றெல்லாம் தன்னைப் பற்றியே ஒரு குழந்தை அடிக்கடி மட்டமாகச் சொல்லிக் கொள்கிறதா? பெரியவர்கள் எவ்வளக்கெவ்வளவு தாழ்வு மன்பான்மை உண்டாகும் பொழுது அதை மறைக்க உணர்வாகப் பேசிக் கொள்வார்களோ அதற்கு எதிரானது குழந்தைகளின் செயல், இக்குழந்தைகள் ஏதோ காரணத்தால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்பட்டிருக்கலாம். அவர்களை அடிக்கடி புகழ்ந்து பேசி அவர்கள் மீது நம்பிக்கை இருப்பதைக் காட்ட வேண்டியது பெற்றோர் கடமை.

* படுக்கையை நனைத்தல்: வளர்ந்த குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்ட பின், திடீரெனத் திரும்பவும் அப்பழக்கத்திற்கு ஆட்பட்டால், அதற்கு மன அழுத்தமே காரணமாக இருக்க இயலும், இதுவும் கண்காணிக்கப்பட வேண்டியது.

* கெட்ட கனவுகளால் பாதிக்கப் படுதல்: எப்போதாவது தூக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு பயந்து அலறுதல் எல்லாருக்கும் உள்ளதுதான். ஆனால் அடிக்கடி பாதிப்பு உண்டாகுமானால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.

* மதிப்பெண் குறைதல், பள்ளி செல்ல மறுத்தல்: நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் குழந்தை திடீரெனப் பள்ளி செல்ல மறுத்தல், பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண் குறைதல், தேர்வுகளில் தோல்வியுறுதல் இவையும் குழந்தைகளின் மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள்தான். உடன் படித்த நண்பன் வேறு ஊருக்கு/ பள்ளிக்கு மாற்றலாகிச் செல்லுதல், புதிய ஆசிரியரின் வருகை, ஆசிரியர் மீது ஏற்படும் வெறுப்பு இவை ஏதேனும் காரணமாக இருக்கலாம்.

குழந்தை பள்ளி செல்ல மறுத்தால், மிரட்டி இழுத்துச் சென்று பள்ளியில் விடாமல், அன்பாக விசாரித்தல் நல்லது. பள்ளியில் ஏதாவது புதிய மாற்றங்கள் உண்டாகியுள்ளனவா என அறிவதும் அடிக்கடி பள்ளிக்குச் சென்று குழந்தையின் வகுப்பாசிரியரிடம் குழந்தை நடந்து கொள்ளும் விதம், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு இவை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவை தவிர காரணமற்ற கோபம் மற்றும் அழுகை, எப்பொழுது பாத்தாலும் பசி என்று சொல்லுவது அல்லது பசியே இல்லாமல் இருப்பது அதிகக் களைப்பு, வலுவின்மை, தூக்கமின்மை அல்லது அதிகத் தூக்கம் முதலியவையும் மனச்சோர்வின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புண்டு.

அதிக மனச்சோர்வு அல்லது பெருமளவு மனச்சோர்வு (Major Deppresson), டிஸ்தைமியா (Dysthymia), இருதுருவக் குலைவு மனநிலை (Bipolar Disorder), காலமாற்றக் கோளாறுகள் (Seasonal Disorder) முதலியவை குழந்தைகளைப் பொதுவாகத் தாக்கும் மனநோய்கள்.

அதிக அல்லது பெருமளவு மனச்சோர்வு என்பது குழந்தைகள் எந்நேரமும் வரு த்தமாக அல்லது குற்ற உணர்ச்சியாலோ தாழ்வு மனப்பான்மையாலோ பீடிக்கப்பட்டு இருப்பது, நான் நன்றாகத் தானே இருக்கிறேன் என்று இவர்கள் சொன்னால் கூட, இவர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தே இருப்பதை நாம் உணர முடியும். இந்த சோகமான மனோ பாவம் இவர்கள் தூக்கம் மற்றும் உணவருந்துதலையும் பாதிக்கும்.

டிஸ்தைமியா பாதிப்பு உடைய குழந் தைகளிடம் குறைந்த அளவு மனச்சோர்வு இருப்பினும், இது வருட கணக்கில் நீடிக்கும் இது அன்றாட நடவடிக்கைக ளைப் பாதிக்காதவரை, பெற்றோர் இதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனாலும் டிஸ்தைமியா வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பத்து சதவீதத்திற்கும் மேற்பட்டோர், காலப் போக்கில் பெருமளவு மனச்சோர்விற்கு ஆளாகி விடுவதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். எனவே, உங்கள் குழந்தைக்கு அடிக்கடி மனநிலை மாறுபாடு (ணிooனீ ஷிwing) ஏற்படுமானால் அக்குழந்தை மீது கவனம் செலுத்துவது நல்லது.

இரு துருவக்குலைவு என்பது குழந்தை ஒருபுறம் வருத்தம். சோகம், தாழ்வு, மனப்பான்மை, குற்ற உணர்ச்சி இவற்றிற்கு ஆட்டப்பட்டிருந்து, மறுபுறம் அதிகம் கோபம், தாறுமாறாக எரிச்சலுற்று வெடித்தல் போன்றவற்றைக் கொண்டிருப்பது ஆகும். இக்குறைப் பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் ஆவர். இக்கோளாறு முதிர்ச்சியடைகையில் எந்தச் செயலிலும் கவனமின்மை, எதிர்மறையாகவே செயல்படுதல் எப்பொழுதும் வடுக்கிறது.

குழந்தைகள் மனச்சோர்வுக்கு ஆளாகியிருந்தால் அதனை இனங்காண வேண்டியவர்கள் பெற்றோர்களாகிய நீங்களே!
Image Hosted by ImageShack.us

1 கருத்து: