இந்த கொடூர அவலம் நிகழ்ந்து 65 ஆண்டுகள் ஆகிறது. இதைத் தொடர்ந்து ஹிரோஷிமா நகரில் கடந்த வெள்ளியன்று அணுகுண்டு வீச்சில் இறந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹிரோஷிமாவில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஹிரோஷிமா நகர மேயர் தடாடோஷி அகிபா தலைமை தாங்கினார். இதில் சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
குண்டு வீச்சின் போது உயிர் பிழைத்தவர்கள் இதில் பலியான தங்கள் உறவினர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுத படி அஞ்சலி செலுத்தினர்.
இந்த துயர சம்பவத்துக்கு அணு குண்டு வீச்சுக்கு காரணமாக இருந்த அமெரிக்கா இதுவரை நடந்த நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகல் எதிலும் பங்கேற்ற தில்லை. ஆனால் கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் முதன் முதலாக அமெரிக்கா பங்கேற்றது.
அதாவது இந்த நிகழ்ச்சியில் ஜப்பானின் அமெரிக்கா தூதர்ஜான் ரோவ் கலந்து கொண்டார். அவரை ஹிரோ ஷிமா நகர மேயர் தடாடோஷி அகிபா வரவேற்று அழைத்து சென்றார்.
நினைவு அஞ்சலி கூட்டத்தில் மேயர் அகிபா பேசும் போது ஹிரோஷிமா நகருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட அவர் இங்கு வருகை தருவதில் தனக்கு விருப்பமே என்றும் அதே நேரத்தில் அது ஒரு விவாதமாகி விடும் என்றும் தெரிவித்தார். மேலும் பேரழிவை உருவாக்கும் அணு ஆயுதங்களை உலக நாடுகள் கைவிட வேண்டும்.
அதற்கான முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டு மனித வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்க வேண்டும் என்ற, அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளும் முதன் முதலாக இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக