அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

வேர்ட் பார்மட்டிங் மாற்ற

வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக, அடிக்கோடு, சாய்வு மற்றும் வேறு சில பார்மட்களில் அவற்றை அமைத்திருப்போம். அமைத்த பின்னர், இந்த பார்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம்.

இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z) அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.

இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q) அழுத்துங்கள். டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தேர்ந் தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+N) அழுத்தவும்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக