அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 1 பிப்ரவரி, 2012

எக்ஸெல் டிப்ஸ் - செல்களில் பார்டர் நீக்கம்

ஒர்க்ஷீட்டில் உள்ள செல்களில் உள்ள பார்டரை நீக்க ஒரு சிறிய, விரைவான வழி உண்டு. பொதுவாக ஒரு செல்லில் உள்ள மதிப்பின் பால், ஒர்க்ஷீட் பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்க, அதில் பார்டர்களை இணைத்து ஏற்படுத்துவது உண்டு. செல் அல்லது பல செல்களில் ஏற்படுத்தப்பட்ட பார்டர்களை மட்டும் நீக்க ஓர் அருமையான வழி உண்டு. அந்த செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், Ctrl+_ கீகளை அழுத்தவும். அதாவது கண்ட்ரோல்+ ஷிப்ட் மற்றும் அண்டர்ஸ்கோர் கீ. செல்லில் உள்ள பார்டர்கள் மட்டுமே நீக்கப்படும். மற்ற பார்மட்டுகள் அப்படியே இருக்கும்.

மொத்தமாக குளோஸ் செய்திட

எக்ஸெல் புரோகிராமில் 22 ஒர்க் புக்குகளைத் திறந்து மிக சீரியஸாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென வந்த அழைப்பின் காரணமாக, உடனே செல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக 22 முறை File > Close செய்ய வேண்டும் என்றால் நேரம் எவ்வளவு ஆவது? இதற்கான சுருக்கு வழி என்ன? Shift கீயை அழுத்திய பின் பைல் மெனுவில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் Close என்பதற்குப் பதில் Close All என்று கிடைக்கும். இதில் கிளிக் செய்தால் அனைத்து பைல்களையும் மூடிவிடும்.

வரிசைகள் எத்தனை?

எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக்காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசை யாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்?
மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ஒவ்வொரு வரிசையாகக் கர்சரைக் கொண்டு சென்று 1,2,3 என்று கணக்கிடுவதா? அதிக எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயம் இவை இரண்டும் நமக்கு சரியாக வராது. எக்ஸெல் இதற்கென்றே ஒரு வசதியைக் கொண்டுள்ளது.

எக்ஸெல் தொகுப்பே உங்களுக்கு நீங்கள் செலக்ட் செய்திடும் வரிசைகளை எண்ணிச் சொல்லும். அதுவும் நீங்கள் செல்களை ஹைலைட் செய்திடும்போதே அவை எண்ணப்பட்டு எண்ணிக்கை என்னவென்று உங்களுக்குச் சொல்லப் படும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வசதி உங்கள் கண் முன் எப்போதும் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை இது வரை உற்று நோக்கவில்லை. அதனை இங்கு பார்ப்போம்.

அடுத்த முறை நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திடுகையில் படுக்கை வரிசைகளுக் கான எழுத்துக்கள் தோன்றும் இடத்திற்கு மேலாகப் பாருங்கள். அல்லது இறுதியாக ஹைலைட் ஆன செல்லுக்கு அருகாமையில் மேலாகப் பாருங்கள். எத்தனை காலம் எனக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக நான்கு காலம் என்றால் 4C எனக் காட்டப்படும். காலம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதே போல ரோ எனப்படும் படுக்கை வரிசை செலக்ட் ஆகும்போது 4R எனக் காட்டப்படும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக