அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 1 பிப்ரவரி, 2012

ஜார்ட் (Jarte) வேர்ட் ப்ராசசர்

நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட் (Jarte) . இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.

இதன் இன்னொரு சிறப்பு, இதில் மெனு தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடத் தேவையில்லை. அதாவது, கர்சரை மெனு அருகே கொண்டு சென்றாலே, மெனு விரிந்து கொடுக்கிறது. ஐகான்கள் மற்றும் பிற மெனுக்கள் கிடைக்கின்றன. இதிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், வழக்கம்போல கிளிக் அடிப்படையிலான இயக்கத்திற்கு மாறிக் கொள்ளலாம்.

இதன் இன்டர்பேஸ் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவை Minimal (NotePad போல), Compact, மற்றும் Classic ஆகும்.
இதன் சில அம்சங்களைக் காணலாம். word, page, line மற்றும் character ஆகியவற்றை எண்ணி அறியலாம். தேதி, நேரம், படங்கள், ஹைப்பர்லிங்க், டேபிள், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஈக்குவேஷன்கள், ஆப்ஜெக்ட்டுகள் ஆகியவற்றை விரும்பும் இடத்தில் இணைக்கலாம். டிக்ஷனரி, தெசாரஸ் ஆகியவற்றுடன் ஸ்பெல் செக் வசதி தரப்பட்டுள்ளது. பல பைல்களை இயக்கினால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு இயக்க டேப் வசதி தரப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் பயன்படுத்தி சலிப்பு கொண்டவர்களுக்கு இந்த ஜார்ட் டெக்ஸ்ட் எடிட்டர் வித்தியாசமாகவும், வசதிகள் பல கொண்டதாகவும் இருக்கும்.
இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதன் வேகம். மிக வேகமாகத் திறக்கப்பட்டு, இயக்கத்திற்குக் கிடைக்கிறது. இது மற்ற எந்த வேர்ட் ப்ராசசரிலும் கிடைக்காத ஒரு வசதி. மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராம் இயங்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதனை நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளோம். அந்த பிரச்னை இங்கு இல்லை. நான்கு விநாடிகளில் இந்த ஜார்ட் புரோகிராம் இயங்கத் தொடங்குகிறது.

இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்வதும் இன்ஸ்டால் செய்வதும் மிக மிக எளிது. இதனை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்தும் இயக்கலாம்.
http://download.cnet.com/Jarte/30002079_410212778.html  என்ற இணைய தள முகவரியிலிருந்து இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கலாம். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக