அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 1 பிப்ரவரி, 2012

NTFS சிஸ்டம்

விண்டோஸ் என்.டி.யுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட பைல் சிஸ்டம். FAT சிஸ்டத்தைக் காட்டிலும் முற்றிலும் புதியதொரு சிஸ்டமாகும். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பினை பைல்களுக்குத் தருவதில் புதிய சிறந்த சிஸ்டமாக இது இயங்குகிறது. ஒவ்வொரு பைலாக இதில் கம்ப்ரஸ் செய்ய முடியும். என்கிரிப்ஷன் பணியையும் மேற்கொள்ள லாம். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் புதியதாக இன்ஸ்டால் செய்தால் இந்த சிஸ்டம் தான் பைல் சிஸ்டமாக இன்ஸ்டால் செய்யப்படும். முந்தைய சிஸ்டங்களி லிருந்து விண்டோஸ் எக்ஸ்பிக்கு அப்கிரேட் செய்தால் அப்கிரேட் இன்ஸ்டலேஷனில் உங்கள் பைல் சிஸ்டத்தினை NTFS சிஸ்டத்திற்கு மாற்றவா என்று கேட்கப் படும். கவலைப்படாமல் யெஸ் என்று பதில் கொடுத்துவிடுங்கள். இதனை நீங்கள் இவ்வாறு இன்ஸ்டால் செய்திடுகையில் மாற்றவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். எப்போது வேண்டும் என்றாலும் NTFS சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு மாற்றிய பிறகு மீண்டும் FAT16 அல்லது FAT32 க்கு மாற வேண்டும் என்றால் ஹார்ட் டிஸ்க்கினை மீண்டும் பார்மட் செய்த பின்னரே மாற்ற முடியும். பொதுவாக யாரும் அது போல விரும்ப மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக