அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 25 ஏப்ரல், 2012

ஆபிஸில் ஃபிலிம் காண்பிப்பது எப்படி?

கவர்ன்மெண்ட் ஆபிஸில் ஃபைலை பாக்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸிலும் ஃபைலை பாக்குறான்.கவர்மெண்ட் ஆபிஸில உட்கார்ந்து உட்கார்ந்து பெஞ்சை தேய்க்கிறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இ-மெயிலை தட்டி தட்டி கீ-போர்டை தேய்கிறான். கவர்ன்மெண்ட் ஆபிஸில் மக்களிடம் பணத்தை புடுங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து தலை மயிரை புடுங்கி(க்கி)றான்(கீ போர்டை தலைகீழாக வைத்து தட்டி பார்த்தாலே தெரியும் எத்தனை தலை மயிரை புடுங்கியிருக்கிறான்னு...).கவர்ன்மெண்ட் ஆபிஸில் தூங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இண்டர்நெட் பாக்குறான். ஆக மொத்தம் கூட்டி கழிச்சி பார்த்த கவர்ன்மெண்ட் ஆபிஸூம் சாஃப்ட்வேர் ஆபிஸூம் ஒன்னு தான்.

"மச்சி, எவ்வளவு வேலை செய்யுறோங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு திறமையா வேலை செய்கிறோங்கிறது தான் முக்கியம்" என்று சொல்லவோ "மச்சி, எவ்வளோ வேலை செய்யுகிறோங்கிறது முக்கியமில்ல, எப்படி செய்கிறோங்கிறது தான் முக்கியம்" என்று சொல்லவோ நான் ஒன்றும் ஆபிஸ் வாழ்க்கையை பழம் தின்று கொட்டை போட்டவனில்லை. அதற்கு பதில் நான் இப்படி சொல்வேன். எப்படி :

" எவ்வளோ வேலை செஞ்சோங்கிறது முக்கியமில்ல, எவ்வளோ ஃபிலிம் காமிச்சோங்கிறது தான் முக்கியம்"

எப்படி தான் ஃபிலிம் காண்பிப்பது....

1) கையில் எப்போதுமே எதாவது டாக்குமெண்டையோ இல்லது கம்பெனி பைலையோ தூக்கிட்டு அலைவது அப்படியே நீங்கள் கம்பெனிக்கு மாஞ்சி மாஞ்சி வேலைப்பார்ப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும். வெறும் கையோடு உங்க பாஸ் ஆபிஸின் முன் நடந்து சென்றால் அவர் நீங்கள் தம் அடிக்கவோ இல்ல கேண்டீனுக்கோ போகிறார் என்று நினைத்துக் கொள்வார். தவறி அன்றைய நியூஸ் பேப்பரைக் கொண்டு அலையாதீர்கள். அப்படி அலைந்தால் நீங்கள் டாய்லெட்டை நோக்கி செல்வதாக உங்கள் பாஸ் நினைத்துக் கொள்வார்.ஆகவே டாக்குமெண்ட் அல்லது கம்பெனி லோகோ போட்ட பைல் நல்ல அபிப்ராயத்துக்கு 100% உத்திரவாதம்.

2) முகத்தை எப்போதுமே சீரியஸாக வைத்துக் கொண்டு கணனி முன் உட்கார்ந்து வலைப்பதிவோ, சி.என்.எனோ, அல்லது ஆனந்த விகடனோ, தமிழ்மணமோ படித்துக் கொண்டிருங்கள். மறந்தும் புன் சிரிப்பை கொண்டு முகத்தில் கொண்டு வந்துவிடாதீர்கள். Alt+TAB எப்போதும் உங்கள் கைவசம் இருக்கட்டும். பாஸ் வந்தால் டக்கென்று பக்கத்தில் உள்ள excel, word சாஃப்ட்வேருக்கு தாவிவிடுங்கள்.

3) உங்கள் அலுவலக மேஜையை எப்போதும் குப்பையாக வைத்திருப்பதால் நீங்கள் நிறைய வேலை பார்க்கிறீர்கள் என்ற தோரனையை ஏற்படுத்தும். பிரிண்ட் அவுட்டை எக்கசக்கமாக எடுத்து தள்ளி மேஜை நிறைய நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்

4) பாஸ் உங்களை பார்க்கும் போது எல்லாம் நீங்கள் பொறுமையற்றவராக, ஏதோ பிரச்சனையில் சிக்கி தவிப்பது போல் பாவலா காட்டுங்கள். தலையை சொரியுங்கள். உஸ் உஸ் என்று சத்தம் போடுங்கள். மெதுவான குரலில் ஏதாவது முணுமுணுங்கள். பாஸ் காதுக்கு உங்கள் குரல் எட்டுமானால் மெதுவாக 'shit' என்று அடிக்கடி கூறுங்கள். உங்கள் ப்ரோகிராமோ இல்லை உங்கள் schedule-ஓ உதைக்கிறது என்று அதற்கு பொருள்படும்.

5) எந்த காலத்திலும் பாஸ் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் நீங்கள் கிளம்பி விடாதீர்கள். இருக்கவே இருக்கு தமிழ்மணம் படிங்க... பின்னூட்டம் விடுங்க. நல்ல டைம் பாஸ். ஒரு வேளை நீங்கள் கட்டாயம் பாஸ் இருக்கும் போதே வெளியேற வேண்டுமென்றால் உங்கள் ஆபிஸ் பேக்கை(office bag) உங்கள் மேஜையிலேயே பாஸ் கண்ணில் படும்படு விட்டுவிட்டு செல்லுங்கள். அது நீங்கள் இன்னும் ஆபிஸில் இருக்கிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும்.மறுநாள் பாஸ் ஆபிஸிற்கு வரும் முன் நீங்கள் வந்து விடுங்கள். இல்லையேல் குட்டு வெளிப்பட்டுவிடும்.

6) நல்ல பெரிய பெரிய கம்பியூட்டர் புத்தகங்களை உங்கள் மேஜை குப்பைகளுக்கு இடையில் திறந்து வைத்து அவ்வப்ப்போது அதில் ஏதோ தேடுவது போல பாவ்லா காட்டுங்கள். புத்தகத்தை எப்போதும் மூட வேண்டாம். நீங்கள் ப்ராஜக்ட் மேனஜராகயிருந்தால் கிளையண்ட் requirement, functional specification போன்ற தடிமனான பைலை உங்கள் முன் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். MS-project schedule உங்கள் முன் இருந்தால் மிகச் சேமம்.

7) வலைப்பதிவில் யாரோ இந்த ஃபிலிமை போட்டிருந்தார்கள். அதை தொகுக்கும் பொருட்டு இங்கே கொடுக்கிறேன். எனக்கு தெரிந்து நிறைய பேர் க்யூபிக்களில் அலங்கார கண்ணாடியை வைத்திருப்பார்கள். என் அலுவலகத்தில் ஒரு காரின் சைடு கண்ணாடியே அழகாக வைத்திருந்தார். அதன் பயன் மிக எளிது. பாஸ் மெதுவாக பூனையாக உங்கள் பின்னால் வந்து பார்க்கும் முன்னர் தூரத்திலிருந்தே அந்த கண்ணாடியில் பார்த்துவிடலாம். அதற்கேற்ப அரெஞ்மெண்ட் செய்துக் கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கான ஃபிலிம் காட்டும் முறைகளில் சிலவற்றை தொகுத்து உங்களுக்கு தந்திருக்கிறேன். இதை பயன்படுத்தி உங்கள் extra curricular activities -ஐ கூட்டிக் கொள்வது உங்கள் திறமை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக