அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 4 ஜூன், 2012

விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட சவூதி அரேபியச் சிறுவன்!

விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் சவூதி அரேபியாவின் Abha நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றார்.


ஆயினும் இவரின் நோயை வைத்தியர்களால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை விசேட வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என்று இவரின் அம்மாவுக்கு வைத்தியர்கள் ஆலோசனை கூறி உள்ளனர்.

ஆனால் மகனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடலாம் என்கிற பேரச்சத்தில் தயார் அவரை வேறு வைத்தியசாலைக்கு மகன் மாற்றப்படுகின்றமையை ஆட்சேபிக்கின்றார்.

சிறுவனின் தகப்பன் இறந்து விட்டார். சிறுவன்தான் வீட்டில் ஒரே ஒரு ஆண் மகன். அவருக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. ஐந்து பேரும் திருமணம் செய்து வெகு தொலைவில் உள்ள இடங்களில் வசிக்கின்றனர்.

இச்சகோதரிகளில் ஒருத்தி தாய்க்கும், சகோதரனுக்கும் உதவிக்கு வழக்கமாக வந்து செல்கின்றார்.

சிறுவனுக்கு ஏற்பட்டு இருக்கின்ற விசித்திர நோய் சிறுவனை பலவீனப்படுத்திக் கொண்டே செல்வதோடு அவரின் எடையையும் குறைத்துக் கொண்டே செல்கின்றது.

இவருக்கு அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுகின்றது. அப்போதெல்லாம் சில வேளைகளில் இவரின் உடல் வெப்பநிலை அதிகரிக்கின்றது.

சவூதி அரேபிய பத்திரிகை ஒன்று இவர் சம்பந்தப்பட்ட செய்தியை பிரசுரித்து உள்ளது. குறித்த நோய் தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக