அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 18 ஜூன், 2012

உயிர் அச்சுறுத்தல் என அகதி தஞ்சம் கோரியோருக்கு இலங்கையில் இரட்டை குடியுரிமை இல்லை

இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தமக்கு அச்சுறுத்தல் அல்லது உயிராபத்து என வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி பின்னர் அந்நாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களுக்கு இலங்கையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படமாட்டாது என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் போது புதிய நடைமுறைகள் பின்பற்றப்படஉள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வேறும் ஓர் நாட்டில் குடியுரிமை உடைய நபர் ஒருவர் இலங்கையில் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்தால், முதலில் ஐந்து ஆண்டுகள் வதிவிட உரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளின் பின்னரே அந் நபருக்கு இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் எவ்வாறு குடிரிமை பெற்றுக் கொண்டார்கள் என்பது பற்றிய விபரங்களை வெளியிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். என்ன காரணத்திற்காக இலங்கையில் குடியுரிமை கோரப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக வி;ண்ணப்பிப்போர் கட்டணமாக இரண்டு தவணைக்குள் 2இலட்சம் ரூபாவினை செலுத்த வேண்டும்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக