அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 25 அக்டோபர், 2012

அரேபிய எஜமானரின் குழந்தையை காப்பாற்ற தடாகத்துக்குள் குதித்து உயிரை விட்ட இலங்கைப்பணிப் பெண்!

அரேபிய எஜமானரின் குழந்தையை காப்பாற்றுகின்ற முயற்சியில் நீச்சல் தடாகத்துக்குள் குதித்து உயிரை விட்டு உள்ளார் இலங்கைப் பணிப் பெண் ஒருவர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் ஒன்று புஜைரா (Fujairah). இங்கு உள்ள நகரமும் புஜைரா என்றே அழைக்கப்படுகின்றது.

இங்கு அல் அய்ன் பரம்பரையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில்தான் இப்பெண் வேலை பார்த்து வந்திருக்கின்றார்.

எஜமானரின் குடும்பத்துடன் டிபா (Dibba) என்கிற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று இருக்கின்றார்கள்.

எஜமானரின் மூன்று வயதுக் குழந்தை சல்மீன் சலீம். தவறுதலாக வயது வந்தவர்களுக்கான நீச்சல் தடாகத்துக்குள் புகுந்து விட்டான். நீருக்குள் மூழ்கத் தொடங்கினான்.

இலங்கைப் பணிப் பெண்ணுடன் கூடவே எதியோப்பிய பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்திருக்கின்றார். குழந்தை மூழ்குகின்றமையை எதியோப்பிய பெண்தான் முதலில் அவதானித்து இருக்க வேண்டும்.

குழந்தையை காப்பாற்ற நீருக்குள் குதித்தார் எதியோப்பிய பெண். நீரில் மூழ்கத் தொடங்கினார். இவரை தொடர்ந்து நீருக்குள் குதித்தார் இலங்கைப் பெண்.


இரு பணிப் பெண்களும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். குழந்தை ஒருவாறு மீட்கப்பட்டார். ஆயினும் மீட்கப்பட்டபோது குழந்தைக்கு இதயத் துடிப்பு நின்று விட்டது போல் இருந்தது. தாய் முதல் உதவி செய்து இருக்கின்றார். பின்பு இதயம் துடிக்க தொடங்கி இருக்கின்றது.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றது. குழந்தை பிழைக்கின்றமைக்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று வைத்தியர்கள் கை விரித்து உள்ளார்கள். காரணம் குழந்தையின் மூளைக்கு பலத்த பாதிப்பு. இந்நிலையில் மகனை வெளிநாட்டுக்கு கொண்டு போய் குணப்படுத்த பெற்றோர் தீர்மானித்து உள்ளார்கள்.

விபத்து இடம்பெற்ற நேரம் மீட்புப் பணியாளர்கள் இருந்து இருக்கவில்லை. எனவே இவ்விபத்துக்கு ஹோட்டலே பொறுப்பேற்க வேண்டும் என்கிறது இக்குடும்பம்.

ஹோட்டல் முகாமையாளரை பொலிஸார் கைது செய்து உள்ளார்கள்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக