அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 2 நவம்பர், 2012

மகுடியை இசைத்ததும் பாம்பு ஆடுவது ஏன்?

பாம்புகளுக்குச் செவிகள் கிடையாது. காற்றில் கலந்து வருகின்ற ஓசையை உணரும் திறன் பாம்புகளுக்குக் கிடையாது. ஆனாலும் தமிழில் ‘கட்செவி’ என்று பாம்பைக் குறிப்பிடுவதுண்டு.

அதாவது, பாம்புகள் தமது கண்ணால் தான் ஒலியை உணருவதாக அக்கால மக்கள் நம்பியிருக்கக் கூடும். பாம்புகளுக்குச் செவிகள் இல்லையென்றால் அவை எவ்வாறு ஓசையை உணர்கின்றன? தரையின் ஊடான அதிர்வுகளை கிரகித்துக்கொள்ளும் திறன் பாம்புக்கு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எதிரிகள் தாக்குவதற்கு வரும் போது தரை யின் ஊடான அதிர்வை உள்வாங்கிக்கொண்டே பாம்பு தப்பியோடுகிறது. அல்லது திருப்பித் தாக்குவதற்கு வருகிறது. அப்படியானால் பாம்பாட்டியின் மகுடி இசைக்கு பாம்பு எவ்வாறு ஆடுகிறது என்ற கேள்வி எழலாம். அதுவும் பழங்கால நம்பிக்கை தான். மகுடி இசை கேட்டு பாம்பு ஆடுவதில்லை.

மகுடியை அப்படியும் இப்படியும் பாம்பாட்டி அசைப்பதனால் பழக்க தோஷத்திலேயே பாம்பும் ஆடுகிறது. இது தான் உண்மை. இரவில் இருட்டில் நடக்கும் போது காலடியை தரையில் நன்கு ஊன்றி வைத்து நடக்குமாறு கிராமங்களில் கூறுவதுண்டு. வழியில் பாம்பு கிடந்தால் அதிர்வை உணர்ந்து விலகி விடுமென்ற நம்பிக்கை தான் அது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக