அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 3 நவம்பர், 2012

கனடாவில் காயத்திரியைக் காணவில்லை

கனடா, ஸ்காபரோ நகரில் நீல்சன் வீதி மற்றும் எஸ்மயர் வீதி சந்திப்புக்கருகில் வசிக்கும் 16 வயதுடைய ஒரு தமிழ் மாணவியைக் காணவில்லையென அறிவித்துள்ள ரொறன்ரோப் பொலிஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவி கோரியுள்ளது. காயத்திரி வைத்திலிங்கம் என்ற 16 வயது மாணவியே காணாமல்...


போனாரென்றும் இவர் 5 அடி 5 அங்குலம் உயரமும் 150 இறாத்தல் எடையும் கொண்டவருமெனத் பொலிசார் தெரிவித்தனர். மண்ணிறக் கண்களும் கறுப்பு நிற அடர்த்தியான தலைமயிருமுடைய இந்த மாணவியின் பாதுகாப்புத் தொடர்பாக தாங்கள் கரிசனை கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தோர் 416.222.8477 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது www.222tips.com இணையத்திலோ தகவல்களைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Kayathiri Vaithilingam, 16, (left) Raquel Blackwood, 21, (rear) Thuzar, 17 and Sheila Williams
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக