அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 5 நவம்பர், 2012

வெளியில எல்லாம் எதுக்கு? பெட்ரூம்தான் பெஸ்ட்!

கெஸ்ட் ரூம், நீச்சல் குளம், மாடிப்படி, கார் என ஜாலியான உறவுக்கு பல இடங்களை தேர்ந்தெடுத்தாலும் வீட்டு படுக்கை அறைதான் பாதுகாப்பான இடம் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள். படுக்கை அறையிலேயே புதுமையான முறையில் எப்படி உறவில் ஈடுபடலாம் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் படியுங்களேன்.

மென்மையான மெத்தை...

படுக்கை அறையில் முக்கியமான விசயம் மெத்தைதான். கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாத மென்மையான மெத்தையை கட்டிலில் வாங்கிப் போடுங்கள். அப்புறம் என்ற சந்தோசமான சல்லாபம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள்.

சேர் கூட வசதிதான்...

படுக்கை அறையில் கட்டில் மெத்தை மட்டுமே உறவுக்கு ஏற்ற இடமில்லை. சேர் கூட வசதியானதுதான். எனவே எப்பவுமே படுக்கை அறையில் சேர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வித்தியாசமான பொசிசனுக்கு சேர் தான் பெஸ்டாம்.

கொஞ்சம் அலங்காரம் அவசியம்...

படுக்கை அறையில் உள்ள பழைய திரைச்சீலைகளை எல்லாம் மாற்றிவிட்டு செலவு கம்மியாக உள்ள பெஸ்டான புதிய திரைச்சீரைகளை மாற்றுங்கள். அதுவே புத்துணர்ச்சியை தரும். தம்பதியரின் விளையாட்டுக்கள் எதுவும் வெளியே தெரிய வாய்ப்பே இல்லையாம்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்...

எப்பவுமே பெட்ரூமில் நீலம், இளஞ்சிவப்பு லைட்தான் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அதுதான் இரவு நேரத்தில் உற்சாகமான உல்லாசத்திற்கு ஏற்றது என்பார்கள். ஒரு மாற்றத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கலாமே!.( தமிழ்நாட்டில் இப்போது பாதி வீட்டில் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் எல்லாமே நடக்கிறது என்பவர்கள் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்) மெல்லிய வெளிச்சத்தில் உங்கள் மனைவி தேவதையாய் ஜொலிப்பாராம்.

மரப்பலகை இருக்கா?

கனமான மரப்பலகை இருக்கா? உங்களின் உடல் அமைப்பை பொருத்து அதன்மேல் உறவில் ஈடுபடலாம். இருவருமே குண்டாக இருந்தால் உடைந்து விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கார்பெட் கூட போதுமே...

படுக்கை அறையில் மெத்தையில்தான் உறவில் ஈடுபடவேண்டும் என்று இல்லை. பாய் தலையணை கூட போதுமாம் உறவு சூப்பராக அமையுமாம். படுக்கை அறையில் கார்பெட் இருந்தால் அதிலேயே அலங்கரித்து சரசத்தில் ஈடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

வெளியிடங்களில் உறவில் ஈடுபடுவது அவ்வளவாக பாதுகாப்பில்லை என்று எச்சரிக்கும் நிபுணர்கள். வீட்டின் படுக்கை அறைதான் பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். முயற்சி செய்து பாருங்களேன்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக