சர்தார்ஜி என்றவுடன் அலைபேசியில் வரும் கிண்டலான குறுஞ்செய்திகளே பலரது நினைவுக்கு வரும். இதில், சர்தார்ஜிக்களை முட்டாள் போன்று சித்தரித்து வரும் வாசகங்களால் அவர்களை பற்றிய தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. ஆனால், இன்றைய தேதியில் பல துறைகளில் சீக்கியர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையில் ஆட்டிப் படைக்கும் அதிகாரமிக்க இடங்களில் சீக்கியர்களே உள்ளனர். போராட்டக் குணம், திடமான சிந்தனை, தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டிய பொறுப்புகளில் இவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
டாடா மோட்டார்ஸ் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வந்த குருபிரதாப் போபராய் சமீபத்தில் ஃபியட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியின் மகனான இவர் சிறுவயதிலேயே தனது தந்தையின் காரை பார்த்து பார்த்து அதன் மீது கொண்ட காதலால் ஆட்டோமொபைல் துறை பக்கம் ஈர்த்து வரப்பட்டார்.
இவர் மட்டுமல்ல ஆட்டோமொபைல் துறையில் ஏராளமான சீக்கியர்கள் பல முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனராக ஜோகிந்தர் சிங் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டிசம்பர் 1 முதல் இவர் பொறுப்பேற்க இருக்கிறார்.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவராக சந்தீப் சிங் பதவி வகித்து வருகிறார். இத்தாலிய நிறுவனமான பியாஜியாவின் நிர்வாக இயக்குனராக இருக்கும் ரவி சோப்ராவும் சீக்கியர்தான். இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக ஏஎஸ் பூரி பதவி வகித்து வருகிறார்.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக இருக்கும் எச்எஸ்.கோயிந்தி சீக்கியர்தான். மற்றொரு ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டாவின் தொழில் விவகாரத் துறை தலைவராக ஹர்பஜன் சிங் பதவி வகித்து வருகிறார். உயர் மட்ட பொறுப்புகளில் இருப்பவர்களை மட்டும் நாம் செய்தியில் சேர்த்துள்ளோம்.
ஆனால், ஏராளமான சீக்கியர்கள் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். இதுமட்டுமல்ல ஆட்டோமொபைல் துறையின் அசைவுகளை துல்லியமாக தரும் பிரபல ஆட்டோகார் இந்தியா இதழின் ஆசிரியர் ஹார்மஸ்த் சோரப்ஜியும் சீக்கியர்தான்.
மேலும், உதிரிபாகங்கள் விற்பனை துறையிலும், டீலர்ஷிப் நடத்துவதிலும் சீக்கியர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இயற்கையிலேயே ஆட்டோமொபைல் துறை மீது இருக்கும் ஈர்ப்பும், அதற்கான பாரம்பரிய சூழலும் எங்களை எளிதாக இங்கு கொண்டு வந்து கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது என்று இத்துறையி்ல உள்ள பலர் கூறுகின்றனர்.
இனியாவது சீக்கிய சகோதரர்கள் மீதான கண்ணோட்டம் மாறும் என்ற நம்பிக்கையுடன்....!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக