அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 2 நவம்பர், 2012

மட்டக்களப்பு இளைஞனின் குறும்படம் "நானும் ஒரு தாய்" (காணொளி)

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் பத்மநாதன் கோவர்த்தனனின் "நானும் ஒரு தாய்" என்கிற குறும்படத்துக்கு இந்தியாவில் ஐந்து விருதுகள் கிடைக்கப் பெற்று உள்ளன.

கோவர்த்தனன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவன். ஹோட்டல் துறையில் இந்தியாவில் உயர் கல்வி பயின்று வருகின்றார். இவருக்கு திரைப்பட துறையில் அதீத நாட்டம்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா தென்னிந்திய திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர். இவரிடம் மூன்று மாதங்கள் நடிப்புப் பயிற்சியும், ஒரு வருடம் இயக்குனர் பயிற்சியும் பெற்றார் கோவர்த்தனன்.

குருவின் ஆசியுடன் இக்குறும்படத்தை எழுதி, இயக்கி, நடித்து உள்ளார்.

இது ஒரு சாதனைக் குறும்படமாக பரிணமித்து உள்ளது.

இக்குறும்படத்துக்கு இந்தியாவில் கிடைத்து இருக்கின்ற விருதுகள் வருமாறு:-

CHEM FEST-2012 (BEST SHORT FILM)
LOYOLA FEST-2012 (SPL JURY AWARD)
ETHIRAJ RHAPSODY-2012 (BEST SHORT FILM)
KANYAKUMARI-NAGERKOL-2012 (SPL JURY AWARD)
LOHITHADAS NATIONAL SHORT FILM FEST-2012 (SPL JURY AWARD FOR BEST ACTRESS)




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக