அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

அம்பாறையில் பூமி அதிர்ச்சி என்பது சில ஊடகங்களில் அறியாமை!

அம்பாறை மாவட்டத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக சில ஊடகங்கள் வெளியிட்ட தகவல்கள் உண்மைக்கு புறப்பானது என்றும் கருங்கற்களை நிலத்திலிருந்து உடைத்து எடுப்பதற்காக வெடிகுண்டை வைத்து சிலர் தகர்த்து எடுத்து வருகின்றனர். அதனை சிலர் நிலநடுக்கம் என பிரசாரம் செய்கின்றனர் என்றும் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு அடிக்கடி நில அதிர்வு போன்ற சத்தங்கள் இடம்பெறுவது வழமை என்றும் வெடிகுண்டை நிலத்திற்கு அடியில் வைத்து வெடிக்க வைப்பதால் பல மைல்களுக்கு அப்பால் சத்தமும் நில அதிர்வு போன்று நடுக்கம் ஏற்படுவதும் வழமை என அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் களநிலமைகளை புரிந்து கொள்ளாத சில ஊடகங்கள் அம்பாறையில் நில அதிர்வு என செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இதனை புவியியல் சுரங்க அகழ்வு நிறுவகத்தின் தலைவர் மஹிந்த செனவிரட்ன உறுதிப்படுத்தி உள்ளார்.
 
அம்பாறையில் நில அதிர்வு என சில ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து தமது நிறுவக ஆய்வுக்குழு ஒன்று அங்கு சென்று நிலஅதிர்வு கருவி ஒன்றை பொருத்தியிருந்தது. அந்த கருவியில்;;;;;;;; நேற்றும் ஒரு அதிர்வு பதிவாகியிருந்தது. அது நிலத்திற்கு அடியில் டைனமெற் எனப்படும் குண்டை வெடிக்க வைத்த அதிர்வு என்று கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக புவியியல் பிரிவும் அம்பாறையில் ஏற்பட்டது நில அதிர்வு அல்ல என்றும் அது மனிதர்களால் நிலத்தில் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் என்றும் தெரிவித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக