அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 8 டிசம்பர், 2012

ஐகானை திரும்பபெற

விண்டோஸ் எக்ஸ்பி லேப்டாப் கம்ப்யூட்டரில் வெகுநாட்களாக, டாஸ்க் பாரில், கம்ப்யூட்டரில் உள்ள மின்சக்தியைக் காட்டும் ஐகான் காணப்பட்டு வந்தது. தற்போது அது காணப்படுவதில்லை. இதனை மீண்டும் எப்படிப் பெறுவது?

விண்டோஸ் எக்ஸ்பி எப்போதும், லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி பவர் எவ்வளவு உள்ளது என்று காட்டும் பவர் மீட்டரைக் கொண்டுள்ளது. லேப்டாப்பினை மின் இணைப்புடன் சேர்த்துவிட்டால் மட்டுமே இது காட்டப்பட மாட்டாது. எப்போதும் இது காட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி அமைத்தாலே, இது எப்போதும் காட்டப்படும். இதனைப் பெற கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.
1. “Start” கிளிக் செய்து, “Control Panel” ஐத் தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு “Power Options” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது பல டேப்கள் கொண்ட “Power Options Properties” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Advanced” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு Always show icon on the taskbar என்ற வரியில் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்திடவும்.
5. அடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக