அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 21 ஜனவரி, 2013

மீண்டும் செஞ்சோலை…

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சி, இரணைமடு வீதியில் அமையப்பெற்றுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பொறுப்பு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்தமநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கே.பி. உட்பட பலர் கலந்துகொண்டனர். செஞ்சோலை சிறுவர் இல்லம் முன்னர் புலிகளினால் பராமரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

(படம் :பிரியந்த ஹேவகே, எஸ்.கே.பிரசாத்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக