அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 23 ஜனவரி, 2013

இலங்கை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் நடத்தும் கேவலமான அரசியல் !!!

ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டது சம்பந்தமாக இந்நாட்டிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் பொழுது வியப்பாகவும் கேவலமாகவும் உள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,

ரிசானா நபீக் குறைந்த வயதிலே வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது சம்பந்தமாக அனுப்பி வைத்த முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிசானாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை சம்பந்தமாக மனிதாபிமான முறையில் இவரது பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இருப்பினும் இவரது இந்த நிலைக்கு காரணமாக அனுப்பி வைத்த முகவரை மட்டும் நான் பார்க்கவில்லை. மாறாக இவரது பெற்றோர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

போலியான வயதை காட்டி இவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்து அவர் மூலமான வருமானத்தை பெற முற்பட்ட பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அதன் மூலமாகவே வெளிநாட்டிற்கு பெண்களை வேலைக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் சுகபோகமடையும் கணவன்மார்களுக்கு பெற்றோர்களுக்கும் தகுந்த பாடத்தை உணர்த்தலாம்.

இது இப்படியிருக்க சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் முஸ்லிம் அல்லாது சிங்களப் பெண்ணாக இருந்திருந்தால் இன்று இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என சம்பவங்களுக்காக அறிக்கை விடுபவர்கள் இந்நாட்டில் ஐக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் விளம்பரம் தேடிக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

இருப்பினும் இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் தலைவர்கள் எடுத்துக்கொண்ட நடவடிக்கை என்ன? ரிசானாவுக்கு அமெரிக்கா அல்லது ஏனைய மேற்குல நாடுகள் மூலமாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் வெள்ளிக்கிழமை நாளில் மேற்குலக நாடுகளின் தூதரங்கள் பயந்து ஓடும் அளவிற்கு பல விதமான போராட்டங்களை அரசாங்கத்திலிருக்கும் முஸ்லிம் தலவர்களும் எதிர்க்கட்சியிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களும் ஒன்றிணைந்து கொழும்பு நகரத்தை ஸ்தம்பிதம் அடையும் அளவிற்கு கொண்டு சென்றிருப்பார்கள்.

ஆனால் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் இடம்பெற்றதனால் இன்று வாய் மூடி மௌனித்திருப்பது ஏன்? சவுதி அரேபியா தூதரகத்தின் முன் இவர்களால் ஏன் ஒரு ஆர்ப்பாட்டத்தினையாவது நடத்த முடியவில்லை.

இனி எதிர்காலத்தில் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நம்பகத்தன்மை உள்ளதா என தெரிந்து கொண்டு அதற்கு முஸ்லிம் மக்கள் துணை போக வேண்டும்.
 இன மத பேதமின்றி அநீதி எங்கு நடக்கின்றதோ அது எந்த நாடாக இருந்தாலும் அதற்கெதிராக நேர்மையான முறையிலே குரல் கொடுக்க வேண்டும் என்பதே எனது இந்த அறிக்கையின் நோக்கமாகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக