அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 7 பிப்ரவரி, 2013

ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா

கார உணவுகள் என்றால் ஞாபகத்திற்கு வருவது ஆந்திரா தான். ஏனெனில் அவர்கள் தான் உணவில் நிறைய காரம் சேர்த்து சமைப்பார்கள். அத்தகைய ஆந்திரா உணவுகளில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டுமே மிகவும் பிரபலம் தான். குறிப்பாக அசைவ உணவுகளில் ஐதராபாத் பிரியாணியை வீட்டில் ட்ரை செய்வது போல, சாதாரணமான உருளைக்கிழங்கு குருமாவையும் வீட்டில் ட்ரை செய்யலாம்.

இத்தகைய உருளைக்கிழங்கு குருமா செய்வது மிகவும் எளிது. இப்போது அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்து, நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு...

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 3
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 8
சோம்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு 2-3 நிமிடம் கிளற வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் பாதி தக்காளியைப் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.அடுத்து, அதில் மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து கிளற வேண்டும்.

பிறகு வேக வைத்து நறுக்கியுள்ள உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு 4-5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

கிரேவியானது சற்று கெட்டியானதும், அதில் கரம் மசாலா சேர்த்து, ஒரு முறை கிளறி, ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா ரெடி!!! இறுதியில் இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்க வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக