அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

டெல்லியில் T.V நிருபருக்கே இந்த நிலைமை

டிவி நிருபருக்கும் பாதுகாப்பு இல்லை நிருபர்

மைக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்..
ஒரு காரில் வரும் இளைஞர்கள் நிருபரை தனியாய் நிற்கும் பெண் என்ற நினைப்பில் கேலி கூச்சலிட்டபடி இவரருகே வந்து நிற்கின்றனர்..

உள்ளிருக்கும் ஒருவன் தலையை வெளியே நீட்டி: "வாரீயா.."
பெண் நிருபர்:"என்ன.. எங்க வரணும்.."?
கேமராமேன்:" என்னப்பா.. என்ன பிரச்சினை..?"
கும்பல்: (தொலைக்காட்சி படபிடிப்பென அறிந்து கொண்டு) "கேமரா.. கேமரா.. கேமரா.." (காரை கிளப்பிக் கொண்டு எஸ்கேப் ஆகின்றனர்..!)

பொதுவாய் எழும் கேள்வி.... இது தொலைக்காட்சி படப்பிடிப்பாய் இல்லாமல் அங்கு இருந்தது தனியாய் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணாய் இருந்திருந்தால் என்ன ஆகிருக்கும்..? எந்த வித ஆபாசமுமின்றி நின்று கொண்டிருக்கும் அந்த பெண் நிருபரை காரை நிறுத்தி லஜ்ஜையான பார்வையுடன் 'கூப்பிடும்' அளவுக்கு தைரியம் அந்த இளைஞர்களுக்கு இருப்பது எதனால்..? சட்டம், காவல், நீதித்துறையின் மேலுள்ள அலட்சியமான எண்ணம்..? பெற்றோர், கல்லூரி கொடுக்கும் தரமற்ற வளர்ப்பு..?


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக