அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 10 மார்ச், 2013

10 கோடி ரூபாய், 1500 பவுண் நகை மோசடி, யாழ் யுவதி கைவரிசை!

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவார் என்று கூறி சுமார் பத்து கோடி ரூபாய் பணம், 1500 பவுண் தங்க நகை ஆகியவற்றை ஏமாற்றி மோசடி செய்த யாழ்ப்பாண யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

சண்டிலிப்பாய் வடக்கைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியும் தாயுமாக சேர்ந்து பலரிடமும் இம்மோசடியை மேற்கொண்டு உள்ளனர்.

பின் இவர்கள் படகில் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல குருநகர் மீனவர்களிடம் பேரம் பேசி உள்ளனர்.

தாயும் மகளும் புத்தளத்தில் மறைந்திருக்கின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். புத்தளப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புத்தளம் பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். மல்லாகம் நீதிவான் யுவதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். தாயை விடுதலை செய்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக