அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 24 மார்ச், 2013

வேர்ட் 2007 புரோகிராமில் வாட்டர் மார்க் எப்படி அமைப்பது?

வேர்ட் 2007ல், ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் Watermark பட்டனை கிளிக் செய்திடவும்.

இதில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட வாட்டர்மார்க் அடையாளங்கள் கிடைக்கும். நீங்களாகத் தயார் செய்த டெக்ஸ்ட் அல்லது கிராபிக்ஸ் படம் என ஏதேனும் ஒன்றை வாட்டர் மார்க்காக அமைக்க வேண்டும் எனில், Custom Watermark என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் எந்த வகை வாட்டர்மார்க் என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் படத்திற்கான பைல் மற்றும் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்கவும்.

பின்னர் இது எப்படி தோற்றமளிக்கும் என்பதனைக் காண Apply என்பதில் கிளிக் செய்து பிரிவியூ தோற்றத்தினைப் பார்க்கவும். உங்களுக்குத் திருப்தியாக இருந்தால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

நீங்கள் தயாரித்த வாட்டர்மார்க் பின் நாளில் தேவை இல்லை எனில், அதனை நீக்க, Page Layout சென்று, Watermark பட்டன் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் Remove Watermark என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக