அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 20 மார்ச், 2013

விண்டோஸ் 8 ல் Shutdown and Restart

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நேரடியாக Shutdown and Restart டைல்ஸ்களை அமைத்துப் பயன்படுத்த ஓர் எளிய வழி ஸ்டார்ட் மெனுவில், C:\ProgramData\Microsoft\ Windows\Start Menu\Programs என்பதில், shutdown.exe கட்டளைக்கு ஷார்ட்கட் ஏற்படுத்துவது தான்.

முதலில் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், New Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு ஷார்ட்கட் எது என்பதனைக் இங்கு கொடுத்துள்ளபடி
c:\windows\system32\shutdown.exe/s/t0 என அமைக்கவும்.

பின்னர் Next கிளிக் செய்திடவும்.

அடுத்து இந்த ஷார்ட்கட் வழிக்கான பெயரை Shutdown என அமைத்து Finish கிளிக் செய்திடவும்.

அடுத்து ஷார்ட் கட்டில் ரைட் கிளிக் செய்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Change Icon என்பதில் கிளிக் செய்திடவும். ஐகான் எதுவும் இல்லை எனச் செய்தி வந்தால், அதனை புறக்கணிக்கவும்.

இப்போது ஐகானுக்கான %SystemRoot%\system32\SHELL 32.dll என்ற பைல் திறக்கப்படும்.

இங்கு Shutdown ஐகானத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து main properties dialog boxல் ஓகே கிளிக் செய்திடவும்.

இப்போது இருக்கின்ற ஷார்ட்கட் ஐ காப்பி செய்து, அதனை Reboot என மறு பெயரிடவும். பின்னர் இதன் Properties மாற்ற வேண்டும். கட்டளை வரி
C:\Windows\System32\shutdown.exe/r/t0 என இருக்கும் வகையில் மாற்றம் இருக்க வேண்டும்.

அதன் பின்னர், அதற்கேற்ற ஐகான் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதே போல ஹைபர்னேட், ஸ்லீப் போன்றவற்றிற்கும் தனித்தனி ஐகான்களை அமைக்கலாம். அவற்றிற்கான கட்டளை வரிகளைக் கீழே காணலாம்.

Hibernate Computer rundll32.exe powrProf.dll,SetSuspendState
Sleep Computer rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக