அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 மார்ச், 2013

விண்டோஸ் 8 ல் விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) புரோகிராம் இயங்க

விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் விண்டோஸ் டிபண்டர் உங்கள் சிஸ்டத்துடன் தரப்பட்டுள்ளது. ஆனால், இயங்கவிடாமல் செட் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம். இதனை சிஸ்டத்துடன் தந்தால், தங்களின் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மக்கள் மத்தியில் விற்பனையாகாமல் போய்விடும் என்பதால், இந்த புரோகிராம்களைத் தயாரித்து விற்பனை செய்திடும் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்தன.

இந்த நெருக்கடி குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்ட போது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் டிபண்டர் புரோகிராமினை இயங்கா நிலையில் வைத்து வழங்க அனுமதி தந்தது.

இதனை எப்படி இயக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தின் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் சென்று, அதில் Windows Defender என டைப் செய்திடவும். விண்டோஸ் டிபண்டர் ஐகான் காட்டப்படுகையில், அதில் கிளிக் செய்திடவும்.

இப்போது விண்டோஸ் டிபண்டர் இயங்கா நிலையில் இருப்பதால், உங்கள் விண்டோஸ் சிஸ்டம் “At risk” என செய்தி காட்டப்படும். பெரிய அளவில் சிகப்பு எக்ஸ் அடையாளம் காட்டப்படும். இனி, விண்டோஸ் டிபண்டர் விண்டோவில் மேலாக உள்ள Settings டேப்பிற்குச் செல்லவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், ‘Realtime protection’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர், ‘Save Changes’ என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி, “At risk” செய்தி கிடைக்காது. விண்டோஸ் டிபண்டர் வேலை செய்வதால், இந்த செய்தி காட்டப்பட மாட்டாது. இது இயங்கியவுடன், ‘Scan Now’ என்பதில் கிளிக் செய்து, கம்ப்யூட்டரை ஒரு முறை ஸ்கேன் செய்து வைக்கவும். அவ்வப்போது ‘Update’ என்ற டேப்பில் கிளிக் செய்து, இதனை அப்டேட் செய்திடவும். விண்டோஸ் டிபண்டர் முதலில் இயங்குவதற்கு முன்னால், இந்த அப்டேட் செயல்பாடு முக்கியம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக