அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 20 மார்ச், 2013

ஆடியோ பைல்களை எடிட் செய்திடச் சிறந்த புரோகிராம்

ஆடியோ பைல்களை எடிட் செய்வதற்கும், அவற்றின் பார்மட்களை மாற்று வதற்கும் பல புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஐந்து புரோகிராம்களை இங்கு குறிப்பிடுகிறேன்.

1. Audacity 2.0.2. கிடைக்கும் இணைய தள முகவரி: http://audacity.sourceforge.net/ இந்த புரோகிராம் 2000 ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு, தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பலவகை வசதிகளைத் தருகிறது.

2. Sony Sound Forge: இதனை http://www.sonycreativesoftware.com/soundforge என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். அதிக விலையும் கூட. ஆனால், தொழில் நுட்ப ரீதியில் ஆடியோ பைல்களைக் கையாள்பவர்களுக்கு இது ஒரு நல்ல சாதனம்.

3. Adobe Audition CS6: அடோப் நிறுவனம் தயாரித்து வழங்கும் ஆடியோ எடிட்டிங் புரோ கிராம். இதனை முழுமையாகக் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. தேவைப்படும் போது, மாதக் கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். கிடைக்கும் தள முகவரி: http://www.adobe.com/products/audition.html

4. NCH WavePad: இதுவும் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்த வேண்டும். கிடைக்கும் தள முகவரி: http://www.nch.com.au/wavepad/index.html

5. Wavosaur: இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம். அது மட்டுமின்றி அளவில் சிறியது. எளிதாகக் கையாளலாம். இந்த புரோகிராமினை http://www.wavosaur.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக