தம்ப் நெயில் (Thumbnail):
பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும்.
லைன் இன் (Line In):
கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.
யு.எஸ்.பி. (USB)
வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் இணைக்கலாம்.
டிரைவர் (Driver):
விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் டிரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும். எனவே டிரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்.
CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.
Driver:
(டிரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும்.
Virus:
(வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம் கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டிவிடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்.
விண்டோஸ் 8 சிஸ்டம்
இதில் டைல்ஸ் மற்றும் சார்ம்ஸ் ஆகியவை உள்ளன. இதற்குப் பதிலாக, கிளாசிக் ஸ்கிரீன் பயன்படுத்த மெட்ரோ திரையில், டெஸ்க்டாப் என்பதில் தட்டவும். உடன் நேரடியாக, நம் அனைவருக்கும் பழக்கமான டெஸ்க்டாப் திரை தரப்படும். அல்லது விண்டோஸ் கீயுடன் ஈ கீ அழுத்தவும். இப்போது திரையில் தோன்றும் ஸ்டார்ட் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் டைல் காட்டப்படவில்லை எனில், சர்ச் பாக்ஸ் சென்று, அதில் Desktop என டைப் செய்திடவும். திரையின் இடது பக்கமாக டெஸ்க்டாப் ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்திடவும். ஸ்கிரீன் கீழாக, இந்த புரோகிராமினை ஸ்டார்ட் ஸ்கிரீனில் பின் செய்வதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். இனி ஸ்டார்ட் ஸ்கிரீனில் டெஸ்க்டாப் டைல் காட்டப்படும்.
MIME
MIME என்பது Multipurpose Internet Mail Extensions என்பதன் விரிவாக்கமாகும். மின் அஞ்சல் அனுப்புவது குறித்த தொழில் நுட்ப சொல். இது இணையம் சார்ந்த ஒரு வரையறையைக் குறிக்கிறது. டெக்ஸ்ட் இல்லாத, ஆஸ்க்கி குறியீட்டில் இல்லாத கேரக்டர்களை அமைத்து இணைக்க இந்த வழி பயன்படுகிறது. இந்த தொழில் நுட்பம் வரும் முன்னர், டெக்ஸ்ட்டை பைனரிக்கு மாற்றி, மாற்றியதை இமெயில் டெக்ஸ்ட்டுடன் இணைத்து அனுப்ப வேண்டும். பின்னர், அதனைப் பெறுபவர் மீண்டும் அதனை மாற்றி பெற்றுப் புரிந்து கொள்வார். ஆனால், மைம் தொழில் நுட்பமுறை வந்த பின்னர், டெக்ஸ்ட்டுடன் படங்கள், வீடியோ பைல்களை இணைத்து அனுப்புவது எளிதாக அமைந்தது.
ஸ்வாப் பைல் (Swap File)
சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்று இயங்குகையில், அது ராம் மெமரியில் வைத்து இயக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு புரோகிராமிற்கு, அதிக இடம் தேவைப்படுகையில், ராம் மெமரியில் இடம் குறைவாக இருந்தால், அது பிரச்னையைச் சந்திக்கிறது. உடனே, இந்த இடப் பங்கீட்டினை நிர்வகிக்கும் Virtual Memory Manager VMM, ராம் மெமரியில் இடம் எங்கேனும் உள்ளதா என்று ஸ்கேன் செய்து பார்க்கும். இடம் கிடைக்காத நிலையில், குறிப்பிட்ட புரோகிராமினை ஸ்வாப் பைல் என்ற முறையில், அதனை இயக்க ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து கொள்கிறது. அங்கிருந்து அது இயக்கப்படும். ஆனால், இது கம்ப்யூட்டரின் இயக்கத்தின் வேகத்தைக் குறைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக