அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 20 மார்ச், 2013

பைல் எக்ஸ்டன்ஷன் என்பது என்ன?

கம்ப்யூட்டர் பைல் பெயர்களுடன், பைலின் தன்மை குறித்த கூடுதல் தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்படுவதே பைல் எக்ஸ்டன்ஷன் பெயர் ஆகும். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் போது, பைலின் தன்மை மற்றும் வடிவமைப்பு குறித்து கூறுகளைக் காட்டும். இதனை அறிந்தே, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எந்த புரோகிராமில் இந்த பைலைத் திறப்பது என்பதனை அறிந்து உடன் திறக்கும். .txt என இருந்தால் அதனை நோட்பேடிலும், doc என இருந்தால் மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமிலும், exe என இருந்தால் அதனை அப்ளிகேஷன் புரோகிராம் என அறிந்து அந்த வகையிலும் திறக்கும்.

எனவே இதனை மாற்றி அமைத்தால், அந்த பைலைத் திறக்க முடியாமல் சிஸ்டம் தடுமாறும். இதனாலேயே, இப்போது வந்திருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த பைல் எக்ஸ்டன்ஷன், பயனாளர்கள் அறியாமல் வைக்கப்பட்டிருக்கும்.

சில வேளைகளில் பைல் எக்ஸ்டன்ஷனை மாற்றி, சிலர் தங்களுக்கு
வேண்டியவற்றை எடுத்துக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட்
தற்போது வேர்ட் புரோகிராமில் .docx என்ற பார்மட்டைத் தருகிறது. அடிப்படையில் இது ஒரு .zip பைல். XML அடிப்படையிலானது. சில விஷயங்கள் இதில் பதியப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இதனை உணர்ந்த சிலர், இந்த பைலில் பதியப்பட்டிருப்பதனை, எக்ஸ்டன்ஷன் மாற்றி பெறுவார்கள். .docx பைல் எக்ஸ்டன்ஷனை .zip என மாற்றி, ஒரு பைலைத் திறக்கும் வகையில் திறந்து பயன்படுத்துவார்கள். சாதாரணமாகப்
பயன்படுத்துவோர் இந்த விளையாட்டில் இறங்க வேண்டாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக