இந்திய மீனவர்கள் இருவரை, சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர், இன்று இந்தியா திரும்பவுள்ளதாக தெரியவருகிறது.
இத்தாலி நாட்டின் கப்பல்படை வீரர்கள் இருவர் இந்திய மீனவர்களை கேரள கரையோரம் சுட்டுக் கொன்றதன் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட வீரர்கள் மீது இந்தியாவில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் ஜாமீனில் தாய்நாடு சென்றிருந்த 2 இத்தாலிய கடற்படை வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று இத்தாலி முரண்டு பிடித்தது.
இதற்கு பதிலடியாக, இந்தியாவில் உள்ள இத்தாலிய தூதர் நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வேறு வழியின்றி, இந்தியாவில் நடைபெறும் கொலை வழக்கு விசாரணைக்கு 2 இத்தாலிய கடற்படை வீரர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இத்தாலிய அரசு நேற்றிரவு அறிவித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக