அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 23 மார்ச், 2013

மகிந்த ராஜபக்ஷவின் உருவபொம்மையை எரித்தவர் உடலில் தீர்ப்பிடித்து படுகாயம் (படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவபொம்மையை எரித்தவர் உடல் கருகி படுகாயமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சர்வதேசக் குற்றவாளியாக அறிவித்து பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வாகன ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் நிலையத்தின் அருகே நடுரோட்டில் ராஜபக்ஷவின் உருவபொம்மையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை காலால் உதைத்துள்ளார். இவ் வேளையில் திடீரென அவரின் உடையில் தீப் பற்றியது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக