கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அப்ளிகேஷன், தான் இயங்கத் தயாராகும் போது, ராம் மெமரியில் தனக்கான இடத்தை எடுத்துக் கொள்ளும். இது போல பல புரோகிராம்கள் ராம் மெமரியில் இடம் கொள்ளும். அப்படியானால், அடுத் தடுத்து புரோகிராம்களை ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் இயக்கினால் என்னவாகும்? என்ற கேள்வி எழுகிறதா? என்னவாகும்? ராம் மெமரியில் இடம் இல்லை என்று பிழைச் செய்தி வரும்.
சரி, ஒரு புரோகிராமினை இயக்கி முடித்த பின்னர், அந்த புரோகிராம், தான் ராம் மெமரியில் கொண்டிருந்த இடத்தை விட்டு நகன்று, அந்த இடத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குக் கொடுக்க வேண்டும்.
அதுதான் முறை. ஆனால், அது இயங்கா நிலையிலும், ராம் மெமரி இடத்தினை விட்டுக் கொடுக்க வில்லை என்றால், அந்த நிலையினைத் தான் மெமரி லீக் எனக் கூறுகின்றனர்.
இதனால், சிஸ்டத்தின் செயல் திறன் மந்தமாகிறது. இது போன்ற நேரங்களில், சிஸ்டம் செயல்படுவது சற்று மந்தமாகுமே தவிர, சிஸ்டம் கிராஷ் ஆக வாய்ப்பில்லை.
ராம் மெமரியை முழுமையாகப் பயன்படுத்துவது தவறா?
இதனை அபாயம் தரும் அளவிற்குக் கொண்டு செல்லத் தேவை இல்லை. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பிரவுசர் மூலம் இணையத்தை உலா வரும் ஒருவர், டாஸ்க் மேனேஜர் விண்டோவினைப் பார்த்தால், அந்த புரோகிராம் மட்டும் 6 ஜிபி மெமரியைப் பயன்படுத்துவதாகக் கிடைக்கும் தகவலைப் பார்த்துப் பயப்படுத்தான் செய்வார்.
உடனே, கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்பட இதுவே காரணம் என்றும் எண்ணி முடிவு செய்வார். இது தவறு.
ராம் நினைவகம் மிக வேகமானது. ஹார்ட் டிஸ்க் மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்களைக் காட்டிலும் வேகமானது.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் டேட்டா, ராம் மெமரியில் வைத்து இயக்கப்படுவதால், கம்ப்யூட்டரின் செயல் திறன் வேகமாக இருக்கும். ராம் மெமரியில் டேட்டா ஏற்றப்படாவிட்டால், அது காலியாக இருக்கும்.
ஏன் அப்படி இருக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக