அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 11 மார்ச், 2013

வெட்ட ஆளில்லை: தலையை வெட்டும் தண்டனை கைவிடும் சவூதி அரேபியா திட்டம்

சவூதியில் மக்கள் முன்னிலையில் குற்றவாளிகளின் தலை துண்டிக்கப்படும் தண்டனையைக் கைவிட அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்களாம்.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டோர் பொது மக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு தலை துண்டிக்கப்படும்.

ஆனால் இந்த தண்டனையை கைவிட சவூதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்களாம்.

தலையை வெட்டும் நபர்களுக்கு பற்றாக்குறையாக உள்ளதால் தான் தலையைத் துண்டிக்கும் தண்டனையை நிறுத்த சவூதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. தலையை வெட்டுவதற்கு பதிலாக சுட்டுக் கொலை செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து அமைச்சக குழு ஆலோசிப்பதாக சவூதி அரேபிய செய்தித்தாளான அல் வாட்டன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே சிறையில் வைத்து கைதிகளுக்கு ஊசி போட்டுக் கொல்லும் முறையை அறிமுகப்படுத்துமாறும் கோரிக்கை எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது. உலக நாடுகளிலேயே சவூதி மட்டும் தான் மரண தண்டனையை தலையை வெட்டி நிறைவேற்றி வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
 இந்த ஆண்டில் இதுவரை 15 பேரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 76 பேரும், 2011ல் 79 பேரும் தலை துண்டித்து கொல்லப்பட்டனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக