அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 10 மார்ச், 2013

குழப்பமான மனநிலையின் முடிவு!

இளம்பெண் சுஷ்மிதா, அவளுடைய பேஸ்புக்கில் போட்டிருந்த புகைப்படத்தையும், போன் நம்பரையும் தவறான நோக்கத்தோடு யாரோ ஒரு நபர் உபயோகித்துள்ளான்.

"நீங்கள் பெண் பிரியர்களா? உங்களுடைய தேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ள இந்த பெண்ணை அழையுங்கள்" என்று ஆபாசமான முறையில் அறிவிப்பு செய்திருக்கிறான்.

இதை படித்துவிட்டு பெண்களுக்கு அலைபவர்கள் "வரீயா? ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் கேட்பாய்? என்று பல அருவெறுக்க தகுந்த கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து இதுப்போன்ற போன் தொல்லைகளும், நண்பர்களும் இவளை தவறானவள் என்று நினைத்துக்கொண்டு தவறாக பேச இந்த பெண் அவமானங்களை தாங்க முடியாமல் நேற்று முன்தினம் தற்கொலை செய்துக்கொண்டாள்.

வதந்திகள் பல பெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றன. அதை எப்படி அணுக வேண்டும் என்கிற தெளிவின்மையும், பதற்றமும், அவமானமும், ஒரு சில நிமிடங்களில் எடுக்கப்படும் அவசர முடிவுகளும் எத்தனை பரிதாபமாக முடிந்துவிடுகிறது.

இதுதான் பெண்களுக்கு தீர்வு என்று நினைத்தால் மிகத் தவறு. இப்படி கேவலமாகப் பேசும் ஆண்களை ஓட ஓட கதறக் கதற தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடவே பெண்கள் நெஞ்சுரம் கொள்ளவும் வேண்டும்.

தன்னை கொல்வது பலவீனம்!
தன்னை வெல்வது அறிவின் பலம்!!

- தமிழச்சி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக