அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 மார்ச், 2013

பிரைவேட் பிரவுசிங் எதற்காக?

இணையம் வழியாக, இப்போதெல்லாம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முடிகிறது. ட்ரெயின், பஸ் டிக்கட் வாங்குவது, எலக்ட்ரிசிட்டி, டெலிபோன் பில் கட்டுவது, பொருட்கள் வாங்குவது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இந்த தளங்களுக்குச் செல்கையில் பிரவுசர்கள் நீங்கள் எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்று பட்டியலிட்டுக் கொண்டு வைத்துக் கொண்டு பின் நாளில் அந்த தளத்தின் முதல் சொல்லை டைப் செய்திடத் தொடங்கினாலே தளத்தின் முகவரியைத் தந்துவிடும். முழுமையான முகவரியை டைப் செய்திடாமலேயே நமக்குத் தள முகவரி கிடைக்கும்.

இதில் என்ன ஆபத்து எனில் அந்த கம்ப்யூட்டரைக் கையாளும் மற்றவர்களுக்கும் இந்த பட்டியல் கிடைக்கும். நீங்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டுமா என்ன? எனவே தான் நாம் பிரைவேட் பிரவுசிங் பயன்படுத்துகிறோம். பிரைவேட் பிரவுசிங் முறையில், நாம் பார்த்த தளங்களின் பெயர்கள் நம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட மாட்டாது. இதனால், இணைய தள முகவரியின் முதல் சில எழுத்துக்களை டைப் செய்தவுடன், அதன் முழு முகவரியும் நமக்குக் கிடைக்காது. ஆனால், மற்றவர்களுக்கும் அது கிடைக்காது என்பது நமக்குப் பாதுகாப்பு தானே.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக