அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 23 மார்ச், 2013

இராணுவத்தில் சேர முண்டி அடிக்கும் தமிழ் யுவதிகள்!

மன்னாரில் இராணுவத்துக்கு தமிழ் பேசும் யுவதிகளை சேர்த்துக் கொள்கின்றமைக்கு நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பான துண்டுப்பிரசுரங்களை இராணுவத்தினர் வெளியிட்டு, விநியோகித்து வருகின்றார்கள்.

சிவில் நிர்வாகப் பணிகளுக்கு திறமையானவர்களை இராணுவத்தின் தொண்டர் படை அணிக்கு சேர்த்துக் கொள்கின்றமைக்கே இந்நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுகின்றன என்று சொல்லப்படுகின்றது.

மன்னார் தள்ளாடி இராணுவ தலைமைச் செயலகத்தில் கடந்த புதன்கிழமை நேர்முகத் தேர்வு இடம்பெற்றது..

இதில் மன்னார், நானாட்டான், அடம்பன், சன்னார் ,பெரியமடு, ஈச்சலவக்கை போன்ற கிராமங்களைச் சேர்ந்த யுவதிகள் கொண்டனர்.

மடு இராணுவ முகாமில் கடந்த வியாழக்கிழமை நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.

வவுனியா நகர இராணுவ முகாமில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியில் இருந்து மதியம் 12.00 மணி வரை தேர்வு இடம்பெற்று உள்ளது.

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்று சனிக்கிழமை மதியம் 2.00 மணியில் இருந்து மாலை 5.00 மணி வரையும் தேர்வு இடம்பெற உள்ளது.

உள்வாங்கப்படுகின்றவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 35,000 ரூபாய்க்கு மேற்பட்ட மாத கொடுப்பனவு வழங்கப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக