அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 மார்ச், 2013

Yes -Yes to All மற்றும் No -No to All பட்டன்கள்

சில வேளைகளில் பைல்களை ஒரு போல்டரிலிருந்து இன்னொன்றுக்கு கொப்பி செய்கையில், அதே பெயரில் ஒரு பைல் இருந்தால், பைலின் பெயரைக் காட்டி, கொப்பி செய்யப்படும் பைலை மேலாகவே எழுதவா? என்று கேட்கிறது.

இதற்கென தரப்படும் பாப் அப்பெட்டியில், Yes எனவும், Yes to All எனவும் பட்டன்கள் இருக்கின்றன. ஆனால், No என்று மட்டுமே உள்ளது. No to All என்று பட்டன் இல்லை. இது எதனால் என்று தெரியுமா???

பொதுவாக பேக் அப் எடுக்கையில், கம்ப்யூட்டர்களுக்கிடையே அப்டேட் செய்த பைல்களை காப்பி செய்கையில் இந்த சூழ்நிலையைச் சந்திக்கலாம். இருக்கின்ற பைல் எதனையும் மாற்ற வேண்டாம் என மொத்தமாகக் கட்டளை கொடுக்க “No to All” கட்டளை தான் தேவை. இந்த பட்டன் தரப்படவில்லை.

ஆனால், இதற்கு ஒரு வழி உள்ளது. No பட்டனை அழுத்துகையில், உங்களுக்கு No to All தேவை என்றால், ஷிப்ட் பட்டனையும் சேர்த்து அழுத்தவும். கட்டத்தில் உள்ள நோ பட்டன் “No to All” என மாறும்.

ஒரே பெயரில் உள்ள பைல் எதுவும் மாற்றப்பட மாட்டாது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக