அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 1 ஏப்ரல், 2013

தமிழினிக்கு ஜூன் இறுதியில் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் விடுதலை பெறுகின்றார்.

புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளிகளுக்கு வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றது.

புனர்வாழ்வின் நிறைவு அடுத்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது சுமார் 20 வரையான புலிப் பெண்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றது.

இவர்களில் ஒருவரான தமிழினி ஜூன் மாதம் 26 ஆம் திகதி அளவில் விடுதலை பெறுகின்றார்.

இவருக்கு மணப் பெண் அலங்காரம், கணனித் துறை ஆகியவற்றில் தொழில் நிபுணத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக