அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

விடுதலை புலிகளின் புத்தம் புதிய தலைவர் அடையாளம் காணப்பட்டார்! இவர்தான் ‘டாப்’பாம்!!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது. அதையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பின்னர் ரகசியமான முறையில் புலிகளுக்கு தலைமை வகித்து வருபவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை உளவுத்துறை சர்வதேச போலிஸாருடன் இணைந்து இந்த புதிய தலைவரை கைது செய்ய முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் புதிய தலைவர், இந்தோனேசியாவில் தற்போது தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின் பின்னர் விடுதலை புலிகளின் பெரிய தலைவராக குறித்த நபர் கருதப்படுகின்றார்.

சீலன் என்ற பெயருடைய இந்த புதிய தலைவர் பத்து பாஸ்போட்களை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள், புலனாய்வு நடவடிக்கைள் ஆகியவற்றுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. பிரபாகரனின் மறைவின் பின்னர் நெடியவன் புலிகளுக்கு தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், ரகசியமான கட்டளைகளை அனைத்தும் இந்த சீலன் என்பவரே பிறப்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெடியவன் மட்டுமல்ல, தற்போது வெளிநாட்டில் சுரேன் சுரேந்திரன், விநாயகம், பிரதமர் உருத்திரகுமாரன் என்று மொத்தம் 4 பேர் தலைவர்களாக உள்ளனர். இந்த நிலைமையில், சீலன் என்ற பெயரில் புதிதாக ஒருவரை அடையாளம் கண்டிருப்பதாக கூறி மிரள வைக்கிறார்கள்.

அதுவும் 10 பாஸ்போர்ட்டுகள்வேறு வைத்திருக்கிறாராம்! கில்லாடிதான்!

புலிகளின் புதிய தலைவரை இலங்கை உளவுப் பிரிவு, சர்வதேச போலீஸ் எல்லாம் சேர்ந்து மடக்க முயற்சி செய்வதை விடுங்கள். தலைவர் சீலனை மற்ற நாலு தலைவர்களும் சும்மா விட்டுவிடுவார்களா?

viruvirupu
Share |
   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக