அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 4 ஏப்ரல், 2013

விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் மெனு மிக நீளமாக இருந்தால்..

நீங்கள் இயக்கும் புரோகிராம்களுக்கேற்றவகையில் ஸ்டார்ட் மெனு காட்டப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப இதனை எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம். முதலில், உங்கள் டாஸ்க்பாரில், காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் Properties என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் கட்டங்கள் பாப் அப் ஆகும்.

இதில் இரண்டு டேப்கள் கிடைக்கும். இதில் Start Menu என்பதில் கிளிக் செய்திடவும்.

ஸ்டார்ட் மெனு என்பதற்கு இடப்புறமாக உள்ள சிறிய பட்டனில் கிளிக் செய்திடவும்.

இதன் பின்னர், Customize என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்து மீண்டும் இரண்டு டேப்கள் உள்ள பாக்ஸ் கிடைக்கும்.

இதில் Advanced என்பதில் கிளிக் செய்திடவும். இந்த கட்டத்தின் நடுவாக, ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை பட்டியலாகக் காட்டப்படும்.

இந்த பட்டியலில், கீழாகச் செல்லவும். கீழ் பகுதிக்குச் சற்று முன்னர், Scroll Programs எனக் காட்டப்படும்.

உங்கள் ஸ்டார்ட் மெனு ஒரு நீள் கட்டமாக இருக்க வேண்டும் என்றால், பாக்ஸில் செக் மார்க் அடையாளம் ஒன்றை இடவும்.

அதற்குப் பதிலாக, ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்கள் தேவை என எண்ணினால், பாக்ஸில் டிக் அடையாளம் இல்லாமல் விட்டுவிடவும்.

அடுத்து கிடைக்கும் ஸ்டார்ட் மெனு மற்றும் டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் கட்டத்தில், Apply அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இப்போது ஒரு நீ..........ளமான அல்லது உயரமான கட்டத்திற்குப் பதிலாக, மூன்று சிறிய கட்டங்களில் ஸ்டார்ட் மெனு கிடைக்கும். இதனால், நீங்கள் ஸ்டார்ட் மெனுவில் விஷயங்களைத் தேடுவதற்கான நேரம் குறையும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக