அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 4 ஏப்ரல், 2013

வேர்ட் டிப்ஸ்

டெக்ஸ்ட்டை மறைத்தல்: வேர்டைப் பொறுத்தவரை, பல வகைகளில், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மற்றவற்றிலிருந்து தனியே எடுப்பாக இருக்கும்படி அமைத் திடலாம். அதே வகையில் டெக்ஸ்ட்டை மறைத்தும், அவற்றைத் தனியாகக் காட்டலாம். இந்த வசதி Format மெனுவில் Font தேர்ந்தெடுத்த பின் நமக்குக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய அளவில் நோட்ஸ் தயாரித்து மற்றவர்கள் அவற்றைப் படிக்காத வகையில் மறைத்து வைக்கலாம். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட் டைப் பின் டாகுமெண்ட்டில் தெரியுமாறும் வைக்கலாம். இதற்கு Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் View மற்றும் Hidden Text தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட் தெரிய வரும். இந்த வசதியினைப் பயன்படுத்தி உரையாற்றுகையில் அதனை அச்சில் பெறுபவருக்கு, குறிப்பு டெக்ஸ்ட்டினை மறைத்தவாறே அச்செடுத்து தரலாம்.

பார்மட்டிங் நீக்க: பெரிய டாகுமெண்ட் ஒன்றில் ஒவ்வொரு இடத்திலும் அதன் கருத்திற்கேற்ப பல பார்மட்டிங் வழிகளை அமைத்திருக்கிறீர்கள். ஆனால் ஒரு நிலையில் குறிப்பிட்ட டெக்ஸ்ட் பகுதியில் உள்ள பார்மட்டிங் அனைத்தையும் நீக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள். ஒவ்வொன்றாக எடுத்து பார்மட் மட்டும் நீக்குவது என்றால் அது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகம் எடுக்கும். இதற்கான சுருக்கு வழி ஒன்றுள்ளது.பார்மட்டிங் நீக்கி அதன் ஒரிஜினல் அமைப்பிற்குக் கொண்டு வர வேண்டிய டெக்ஸ்ட் அனைத்தையும் முதலில் தேர்ந்தெடுங்கள். பின் கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் கீகளை அழுத்துங்கள். பார்மட்டிங் அனைத்தும் மறைந்துவிடும்.

சொந்த டெம்ப்ளேட் தயார் செய்திட: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் பல டெம்ப் ளேட்டுகள் தரப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் இணைய தளத்திலும் டெம்ப்ளேட்டுகள் நாம் பயன்படுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு சில வேளைகளில் நாம் மிகக் கஷ்டப்பட்டு டாகுமென்ட் ஒன்றை பல வகையான பார்மட்டிங் வழிகளுடன் அமைத் திருப்போம். அந்த பார்மட்டிங் வழி நமக்குப் பிடித்திருப்பதுடன் அந்த வகையிலேயே மற்ற டாகுமெண்ட்களை அமைக்க விரும்புவோம்.
இதற்கு ஒரே வழி இதனை ஒரு டெம்ப்ளேட்டாக அமைத்து பயன்படுத்துவதுதான். இதற்கு File மெனு சென்று Save As டயலாக் பாக்ஸை வரவழைக்க வேண்டும். அந்த பாக்ஸின் கீழாக வேர்ட் டாகுமெண்ட் என அமைக்காமல் Word Template என்பதனைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு பெயரும் வழங்க வேண்டும். இப்போது இது ஒரு டெம்ப் ளேட்டாக அமைந்துவிடும். இனி இந்த வகையில் டாகுமெண்ட் அமைக்க விரும் பினால் இந்த டெம்ப்ளேட்டினைத் தேர்ந் தெடுத்து அமைக்கலாம்.

கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும்.
இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின் உள்ள பிரிவில் ‘Display gridlines on screen’ என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கை வாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்.

வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். ‘Bulleted’ என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும்.

இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது. இது சிறிய புள்ளியிலிருந்து எந்த வகை அடையாளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். A numbered list என்பது, இதே பட்டியலில், அடையாளப் படத்திற்குப் பதிலாக, வரிசையாக எண்கள் இருக்கும். தொடர் கருத்து அல்லது தகவல்களைத் தருகையில், இந்த லிஸ்ட் வகை பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், நம் கவனத்தைக் கவரும் வகையில் தரப்படும் தொடர்பற்ற, ஆனால், முக்கியமான தகவல்கள் புல்லட் இணைந்த பட்டியலாகத் தரப்பட வேண்டும். வேர்ட் இதனைத் தயாரித்து வழங்க எளிய வழிகளைக் கொண்டுள்ளது. முதலில், ஒவ்வொரு தகவலையும் டைப் செய்து, அதன் முடிவில் என்டர் அழுத்தவும். ஒரு தகவல், ஒரு வரிக்கு மேல் சென்றாலும், இறுதியில் மட்டுமே என்டர் அழுத்தவும். ஒவ்வொரு வரி முடிவிலும் என்டர் அழுத்த வேண்டாம்.

அனைத்து தகவல்களையும் பட்டியலாகத் தந்த பின்னர், மொத்தமாக அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ரிப்பனில், ஹோம் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து பாரா குரூப்பில் உள்ள Bullets tool மற்றும் Numbering tool என்பவற்றில், எது உங்களுக்கு தேவைப்படுமோ, அதில் கிளிக் செய்து பட்டியலை நிறைவு செய்திடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக