ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளின் கழுத்துக்களில் மீண்டும் சைனற் குப்பிகளை அணிவிக்கின்றமைக்கவே விரும்புகின்றனர் என வீடமைப்பு மற்றும் பொறியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்து உள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி வீட்டுத் திட்டத்தின் புனர் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
“ உங்கள் குழந்தைகளின் கழுத்துக்களில் தங்க மாலை அணிகின்றமையையா அல்லது சைனற் குப்பிகளை அணிகின்றமையையா விரும்புகின்றீர்கள்? என தமிழ் மக்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன்.
தென்னிந்தியாவில் இருப்பவர்கள் மீண்டும் யுத்தத்தை விரும்புகிறனர். அங்கு ஏற்பட்டு உள்ள கொந்தளிப்பான நிலைமைக்கு காரணம் தனி நாடு கோருகின்றனர். இவர்களின் பகல் கனவு எதுவும் நிறைவேறாது.
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலத்தில்கூட இல்லாத கொந்தளிப்பு தென்னிந்தியாவில் இப்போது ஏற்படக் காரணம் புலம் பெயந்த தமிழர்களின் வகை தொகை அற்ற பணமே.
உண்மையில் தமிழ் மக்களில் அக்கறையற்று இருப்பவர்கள்தான் தமிழ் நாட்டில் உள்ளாகள். அவர்கள் பிரிவினைவாதத்தை விரும்புகின்றனர். இதையே இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் செய்து கொண்டு இருக்கின்றது.
சம்பந்தன் நாடாளுமன்றத்துக்கு வருகின்ற நாட்களை விட வெளிநாடுகளிலேயே அதிக காலத்தை கழிக்கின்றார். அவருக்கு திருகோணமாலையில் எங்கு தமிழ் குடியிருப்புக்கள் இருக்கிறன? என்பது தெரியாது.
கடந்த கால யுத்தில் ஏற்பட்ட சூழலை மாற்றுகின்றமைக்கே நாம் விரும்புகின்றோம். யுத்தம் தந்த வடுக்கள் தற்போது தமிழ் மக்களின் இதயங்களில் இருந்து அகற்றப்பட்டு வருகின்றன. அதே போல் இடிந்த சிதைந்த கட்டிடங்களை நாங்கள் புனரமைத்து வருகின்றோம்.
யுத்தத்தின்போது இழக்கப்பட்ட இரு தரப்பு உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் எங்களால் பெற்றுத் தர முடியும். யுத்ததின்போது மாண்டு போன குடியிருப்புக்களுக்கு தற்போது உயிர் கொடுத்து வருக்கின்றோம். ”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக