அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 ஏப்ரல், 2013

பிரபாகரனுக்கு நடுநிசியில் சொல்லப்பட்ட சிதம்பர இரகசியம்! (Video)

பிரபாகரனை கோடம்பாக்கத்தில் அன்ரன் பாலசிங்கம் தங்கி இருந்த வீட்டில் 1984 களில் ஒரு நாள் நள்ளிரவு இரகசியமாக சென்று சந்தித்து பேசி உள்ளார் அமைச்சர் ப. சிதம்பரம்.

இவர் இச்சந்திப்பை 29 வருடங்களுக்கு பின் வெளிப்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் விடயத்தில் வரித்துக் கொண்ட நிலைப்பாடு குறித்து சென்னையில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோதே இதை இவர் கூற நேர்ந்தது.

இந்திய அரசோடு ஒத்துழைத்தால் தமிழ் மாநிலம் வடக்கு, கிழக்கில் உருவாகும், இதன் முதலமைச்சராக பிரபாகரனே வர முடியும் என்று இச்சந்திப்பில் சிதம்பரம் சொல்லி இருக்கின்றார்.

இச்சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் உட்பட இன்னும் சில புலிகள் பங்கேற்று இருந்தனர்.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக