அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 10 மே, 2013

ஆபாசத்தால் பேஃஸ் புக்கில் ஆபத்து !

எச்சரிக்கை! Facebook இல் தோன்றும் இவ் வீடியோவில் இருந்து கவனமாக இருங்கள் ! இது ஒரு எச்சரிக்கையே ! தற்போது Facebook இல் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான வீடியோ ஒன்று உங்கள் நண்பர்களால் பகிரப்பட்டதாக உங்கள் Feed இல் இடம்பெறும் சம்பவம் நடைபெறுகிறது.

சற்று ஆபாசமான படம் காணப்படும் இவ் வீடியோவை நீங்கள் பார்க்க முயன்று அவ் இணைப்பில் க்ளிக் செய்தால் அவ் இணைப்பு கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு அனுமதி கேட்கும்.

ஆனால் இதில் உள்ளது போல இவ் இணைப்பு Youtube உடம் சம்மந்தப்பட்டது இல்லை. நீங்கள் “Okay” ஐ அழுத்திவிட்டால் போதும், அவ் ஆபாச வீடியோ, உங்களால் பகிரப்பட்டதாக, உங்கள் நண்பர்களின் Feed க்கு சென்றுவிடும்.

எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் நண்பர்களும் இது தொடர்பில் அறிந்துகொள்ள, இச் செய்தியை அனைவரிடமும் பகிருங்கள். உங்கள் அந்தரங்க சட்டிங், தொடர்புகள் என்பனவற்றையும் இது களவாடி மற்றவர்களுக்கு அனுப்பிவிடும்.

இந்த சாப்ட்வெயர் தொடர்பாக தமிழர்கள் கவனமாக இருப்பது நல்லது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக