அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 15 மே, 2013

யாழில் நவீன கள்ளுத் தவறணைகள்!


யாழ். வடமராட்சியில் அச்சுவேலியில் நெருப்புமூட்டி பகுதியில் அமையப் பெற்று உள்ள கள்ளுத் தவறணை இது.

நவீனமயப்படுத்தப்பட்ட தவறணைகளில் இதுவும் ஒன்று.

கொட்டிலுக்கு பதிலாக வீடு ஒன்றில் நடத்தப்படுகின்றது.

 
மேசைகள், கதிரைகள் உள்ளே ஒழுங்காக போடப்பட்டு இருந்தன.

பிளாவுக்கு பதிலாக கண்ணாடி குவளைகள்.

வாடிக்கையாளர்களின் நலனை கண்காணிக்க சிப்பந்திகள்.

இருப்பினும் காற்று வாங்குகின்றமைக்காக சில நுகர்வோர்கள் வாசலை அண்டிய இடத்தில் சீமெந்து தரையில் அமர்ந்து இருந்தனர்.

பாரம்பரியமாக இருந்து வருகின்ற தவறணைகளை பார்க்கின்றபோதுதான் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கின்ற தவறணை என்கிற அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக