இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் ராணுவப் படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான சீலன் என்பவரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
2008-ம் ஆண்டில் இலங்கை வில்பத்து காட்டு பகுதியில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல்களுக்கு தலைமை வகித்து நடத்தியதாக சீலன் மீது, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குக்கான விசாரணை, அனுராதபுர நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
“விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு உறுப்பினராக இருந்த சீலன், தற்போது பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய உத்ரவிட வேண்டும்” என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, சீலனை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற தீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
Viruvirupu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக