அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 15 ஜூலை, 2013

ஒரே குடும்பத்தில் 3 தலைமுறைகளாக இரட்டைக் குழந்தைகள் பிரசவம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து 3 தலைமுறைகளாக இரட்டைக் குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அடுத்தடுத்து 3 தலைமுறையில் இரட்டைக் குழந்தைகள் பிரசவமானது உலகில் 20,000 பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.

கடந்த வாரம் டெரெக் - அஷ்லி விட்ஸன் (30 வயது) தம்பதிக்கு எதன் மற்றும் எலித் ஆகிய இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

அஷ்லி விட்ஸனுக்கு புரோகன், ரொபின் என்ற 21 வயது இரட்டை சகோதரிகள் உள்ளனர்.

அவர்களது தாயாரான ஜக்குயின் கிளெனினுக்கு (52 வயது) எலிஸபெத், மக்கென்ஸி என்ற இரட்டைச் சகோதரி உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக